பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் சமரி அதபத்துவின் அற்புதமான சதத்தின் உதவியுடன் இலங்கை மகளிர் அணி வெற்றியை பதிவுசெய்துள்ளது.
இலங்கை மகளிர் அணி இறுதியாக 2018ம் ஆண்டு இந்திய மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் ஒருநாள் போட்டியொன்றில் வெற்றிபெற்றிருந்த நிலையில், அதனைத்தொடர்ந்து மகளிர் ஒருநாள் போட்டியில் வெற்றியொன்றினை பதிவுசெய்தது.
>> ஒரே நாளில் விற்றுத்தீர்ந்த முதல் இரு T20I போட்டிகளுக்கான டிக்கெட்டுகள்!
இந்த தொடர் முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணியின் தலைவி கடந்த போட்டிகளில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தவறியிருந்த போதும், இந்தப்போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணிக்கு வேகமான ஓட்டக்குவிப்புடன் கூடிய சதத்தை சமரி அதபத்து விளாச, மறுமுனையில் கடந்த போட்டிகளில் ஓரளவு ஓட்டங்களை விளாசிவந்த ஹர்சிதா மாதவி அரைச்சதத்தை கடந்தார்.
சமரி அதபத்து 85 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 13 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 101 ஓட்டங்களை குவித்ததுடன், ஹர்சிதா மாதவி 75 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க இலங்கை மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 260 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் மகளிர் அணியின் அனாம் அமீன் மற்றும் பாத்திமா சனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பாகிஸ்தான் மகளிர் அணியின் துடுப்பாட்டத்தை பொருத்தவரையில் கடந்த போட்டிகளில் ஓட்டங்களை குவித்த அணித்தலைவி பிஸ்மா மரூப் மற்றும் சிட்ரா அமீன் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க ஏனைய வீராங்கனைகள் எதிர்பார்த்த அளவில் ஓட்டங்களை குவிக்கவில்லை.
ஆலியா ரியாஷ் 56 ஓட்டங்களையும், ஒமைமா சொஹைல் 40 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள, பாகிஸ்தான் மகளிர் அணி 41.4 ஓவர்கள் நிறைவில் 167 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இலங்கை அணி சார்பாக ஓசதி ரணசிங்க மற்றும் சமரி அதபத்து ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இலங்கை மகளிர் அணி மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நிறைவுக்குவந்துள்ளதுடன், முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது. இதற்கு முதல் நடைபெற்ற T20I தொடரில் இலங்கை அணி 0-3 என தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Hasini Perera | run out (Sidra Nawaz) | 3 | 5 | 0 | 0 | 60.00 |
Chamari Athapaththu | st Sidra Nawaz b Nida Dar | 101 | 85 | 13 | 1 | 118.82 |
Hansima Karunarathne | lbw b Anam Amin | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Harshitha Madavi | lbw b Anam Amin | 75 | 128 | 3 | 0 | 58.59 |
Kavisha Dilhari | c Muneeba Ali b Omaima Sohail | 28 | 44 | 2 | 0 | 63.64 |
Nilakshi de Silva | not out | 24 | 18 | 2 | 0 | 133.33 |
Anushka Sanjeewani | c Sidra Nawaz b Fatima Sana | 9 | 14 | 0 | 0 | 64.29 |
Oshadi Ranasinghe | b Fatima Sana | 4 | 2 | 1 | 0 | 200.00 |
Sugandika Kumari | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 16 (b 3 , lb 8 , nb 3, w 2, pen 0) |
Total | 260/7 (50 Overs, RR: 5.2) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Diana Baig | 6 | 1 | 23 | 0 | 3.83 | |
Anam Amin | 10 | 1 | 43 | 2 | 4.30 | |
Nida Dar | 9 | 0 | 39 | 1 | 4.33 | |
Fatima Sana | 8 | 0 | 51 | 2 | 6.38 | |
Ghulam Fatima | 5 | 0 | 34 | 0 | 6.80 | |
Omaima Sohail | 8 | 0 | 36 | 1 | 4.50 | |
Bismah Maroof | 4 | 0 | 23 | 0 | 5.75 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Muneeba Ali | run out (Chamari Athapaththu) | 16 | 23 | 2 | 0 | 69.57 |
Sidra Ameen | lbw b Chamari Athapaththu | 19 | 24 | 3 | 0 | 79.17 |
Bismah Maroof | b Oshadi Ranasinghe | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Omaima Sohail | b Sugandika Kumari | 40 | 61 | 4 | 0 | 65.57 |
Nida Dar | lbw b Chamari Athapaththu | 5 | 8 | 0 | 0 | 62.50 |
Aliya Riaz | c Nilakshi de Silva b Oshadi Ranasinghe | 56 | 82 | 4 | 0 | 68.29 |
Sidra Nawaz | lbw b Kavisha Dilhari | 7 | 18 | 0 | 0 | 38.89 |
Fatima Sana | run out (Hansima Karunarathne) | 12 | 19 | 0 | 0 | 63.16 |
Diana Baig | run out (Kavisha Dilhari) | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Anam Amin | c Anushka Sanjeewani b Inoka Ranaweera | 1 | 10 | 0 | 0 | 10.00 |
Ghulam Fatima | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 11 (b 0 , lb 2 , nb 1, w 8, pen 0) |
Total | 167/10 (41 Overs, RR: 4.07) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sugandika Kumari | 10 | 0 | 39 | 1 | 3.90 | |
Achini Kulasuriya | 6 | 1 | 25 | 0 | 4.17 | |
Oshadi Ranasinghe | 7 | 0 | 29 | 2 | 4.14 | |
Chamari Athapaththu | 6 | 1 | 20 | 2 | 3.33 | |
Inoka Ranaweera | 7 | 0 | 28 | 1 | 4.00 | |
Kavisha Dilhari | 5 | 0 | 24 | 1 | 4.80 |
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<