சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில், பங்களாதேஷ் அணியினை லிடன் தாஸ் – முஷ்பிகுர் ரஹீம் ஜோடி அபார இணைப்பாட்டத்துடன் (254*) சரிவில் இருந்து மீட்டுள்ளது.
>> இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை பதினொருவர் வெளியானது
இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி டாக்கா நகரில் இன்று (23) ஆரம்பமாகியிருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் மொமினுல் ஹக் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தார்.
இந்த தொடரின் முதல் போட்டி சமநிலை அடைந்த நிலையில், தொடரினை தீர்மானிக்கும் முக்கிய போட்டியாக டாக்காவில் ஆரம்பமாகியுள்ள போட்டி அமைந்திருந்தது.
இதேவேளை இப்போட்டிக்கான இலங்கை அணியில் ஒரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன்படி லசித் எம்புல்தெனியவிற்கு பதிலாக பிரவீன் ஜயவிக்ரம இலங்கை அணியில் வாய்ப்பினை பெற்றிருந்தார்.
மறுமுனையில் பங்களாதேஷ் அணி இரண்டு மாற்றங்களுடன் இன்றைய மோதலில் களமிறங்கியிருந்தது.
இலங்கை அணி – திமுத் கருணாரட்ன (தலைவர்), குசல் மெண்டிஸ், ஓசத பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஞய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, பிரவீன் ஜயவிக்ரம, கசுன் ராஜித, ரமேஷ் மெண்டிஸ், அசித பெர்னாண்டோ
பங்களாதேஷ் அணி – தமிம் இக்பால், மஹ்முதுல் ஹஸன் ஜோய், நஜ்முல் ஹொசைன் சான்டோ, முஷ்பிகுர் ரஹீம், மொமினுல் ஹக் (தலைவர்), லிடன் தாஸ், சகீப் அல் ஹசன், தைஜுல் இஸ்லாம், இபடொட் ஹொசைன், மொசாதிக் ஹொசைன், காலேத் அஹ்மட்
பின்னர் நாணய சுழற்சிக்கு அமைய முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணிக்கு இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் மிகவும் மோசமான ஆரம்பத்தினை வழங்கியிருந்தனர்.
சர்ரே அணியை பந்துவீச்சில் மிரட்டிய துனித் வெல்லாலகே
அதன்படி பங்களாதேஷ் அணியின் முன்வரிசை வீரர்களான தமிம் இக்பால், மொமினுல் ஹக் ஆகியோர் கசுன் ராஜித மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோரின் அபார பந்துவீச்சு காரணமாக 10 இற்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பங்களாதேஷ் வீரர்கள் ஒரு கட்டத்தில் 24 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறினர்.
இந்த நிலையில் பங்களாதேஷ் அணியின் 6ஆம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த முஷ்பிகுர் ரஹீம் – லிடன் தாஸ் ஆகிய இருவரும் பொறுமையான முறையில் சிறந்த இணைப்பாட்டம் ஒன்றுக்கு அடித்தளமிட்டனர்.
இந்த இருவரினதும் இணைப்பாட்ட முயற்சி வெற்றியளிக்க பங்களாதேஷ் அணி, முதல் நாளின் மதிய போசண இடைவேளையினை விக்கெட் இழப்பின்றி கடந்தது.
பின்னர் தொடர்ந்து இரண்டு வீரர்களும் அரைச்சதம் பெற்று, முதல் நாளின் தேநீர் இடைவேளை வரை தமது தரப்பினை வலுப்படுத்தியிருந்தனர்.
தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணியின் 6ஆம் விக்கெட் இணைப்பாட்டமாக 200 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற முஷ்பிகுர் ரஹீம் – லிடன் தாஸ் ஆகிய இருவரும் சதங்களையும் பதிவு செய்தனர்.
தொடர்ந்து இந்த வீரர்களின் சதங்களோடு பங்களாதேஷ் அணி, முதல் நாள் போட்டி ஆட்டநேரம் நிறைவுக்கு வரும் போது 85 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்கள் பெற்று வலுவான நிலைக்குச் சென்றிருக்கின்றது.
இந்த வீரர்களில் தன்னுடைய 3ஆவது டெஸ்ட் சதத்தினைப் பூர்த்தி செய்த லிடன் தாஸ் 135 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நிற்க, முஷ்பிகுர் ரஹீம் 115 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் இன்று கசுன் ராஜித 3 விக்கெட்டுக்களையும், அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Mahmudul Hasan Joy | b Kasun Rajitha | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Tamim Iqbal | c Praveen Jayawickrama b Asitha Fernando | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Najmul Hossain Shanto | b Kasun Rajitha | 8 | 21 | 1 | 0 | 38.10 |
Mominul Haque | c Niroshan Dickwella b Asitha Fernando | 9 | 9 | 2 | 0 | 100.00 |
Mushfiqur Rahim | not out | 175 | 355 | 21 | 0 | 49.30 |
Shakib Al Hasan (vc) | lbw b Kasun Rajitha | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Liton Das | c Kusal Mendis b Kasun Rajitha | 141 | 246 | 16 | 1 | 57.32 |
Mosaddek Hossain | c Niroshan Dickwella b Kasun Rajitha | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Taijul Islam | c Niroshan Dickwella b Asitha Fernando | 15 | 37 | 0 | 0 | 40.54 |
Khaled Ahmed | c Niroshan Dickwella b Asitha Fernando | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Ebadot Hossain | not out | 0 | 20 | 0 | 0 | 0.00 |
Extras | 17 (b 9 , lb 3 , nb 2, w 3, pen 0) |
Total | 365/9 (116.2 Overs, RR: 3.14) |
Fall of Wickets | 1-1 (0.2) Mahmudul Hasan Joy , 2-6 (1.4) Tamim Iqbal, 3-16 (5.1) Mominul Haque, 4-24 (6.4) Najmul Hossain Shanto, 5-24 (6.5) Shakib Al Hasan (vc), 6-296 (92.1) Liton Das, 7-296 (92.4) Taijul Islam, 8-349 (107.1) Khaled Ahmed, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kasun Rajitha | 28.2 | 7 | 64 | 5 | 2.27 | |
Asitha Fernando | 26 | 2 | 93 | 4 | 3.58 | |
Praveen Jayawickrama | 38 | 9 | 108 | 0 | 2.84 | |
Ramesh Mendis | 14 | 0 | 53 | 0 | 3.79 | |
Dhananjaya de Silva | 6 | 0 | 27 | 0 | 4.50 | |
Dimuth Karunarathne | 4 | 1 | 8 | 0 | 2.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Oshada Fernando | c Najmul Hossain Shanto b Ebadot Hossain | 57 | 91 | 8 | 1 | 62.64 |
Dimuth Karunarathne | b Shakib Al Hasan (vc) | 80 | 155 | 9 | 0 | 51.61 |
Kusal Mendis | lbw b Shakib Al Hasan (vc) | 11 | 49 | 0 | 0 | 22.45 |
Kasun Rajitha | b Ebadot Hossain | 0 | 12 | 0 | 0 | 0.00 |
Angelo Mathews | not out | 145 | 342 | 12 | 2 | 42.40 |
Dhananjaya de Silva | c Liton Das b Shakib Al Hasan (vc) | 58 | 95 | 9 | 0 | 61.05 |
Dinesh Chandimal | c Tamim Iqbal b Ebadot Hossain | 124 | 219 | 11 | 1 | 56.62 |
Niroshan Dickwella | c Liton Das b Shakib Al Hasan (vc) | 9 | 10 | 1 | 0 | 90.00 |
Ramesh Mendis | lbw b Ebadot Hossain | 10 | 11 | 2 | 0 | 90.91 |
Praveen Jayawickrama | c Liton Das b Shakib Al Hasan (vc) | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Asitha Fernando | run out (Shakib Al Hasan (vc)) | 2 | 6 | 0 | 0 | 33.33 |
Extras | 10 (b 0 , lb 8 , nb 2, w 0, pen 0) |
Total | 506/10 (165.1 Overs, RR: 3.06) |
Fall of Wickets | 1-95 (25.5) Oshada Fernando, 2-139 (43.1) Kusal Mendis, 3-144 (46.2) Kasun Rajitha, 4-164 (55.6) Dimuth Karunarathne, 5-266 (87.5) Dhananjaya de Silva, 6-465 (156.6) Dinesh Chandimal, 7-501 (162.5) Ramesh Mendis, 8-502 (163.3) Praveen Jayawickrama, 9-506 (165.1) Asitha Fernando , 10-482 (192.5) Niroshan Dickwella, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Khaled Ahmed | 23 | 1 | 85 | 0 | 3.70 | |
Ebadot Hossain | 38 | 4 | 148 | 4 | 3.89 | |
Shakib Al Hasan | 40.1 | 11 | 96 | 5 | 2.39 | |
Mosaddek Hossain | 12 | 1 | 38 | 0 | 3.17 | |
Taijul Islam | 49 | 10 | 124 | 0 | 2.53 | |
Mominul Haque | 3 | 0 | 7 | 0 | 2.33 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Mahmudul Hasan Joy | c Kusal Mendis b Asitha Fernando | 15 | 27 | 3 | 0 | 55.56 |
Tamim Iqbal | c Kusal Mendis b Asitha Fernando | 0 | 11 | 0 | 0 | 0.00 |
Najmul Hossain Shanto | run out (Praveen Jayawickrama) | 2 | 11 | 0 | 0 | 18.18 |
Mominul Haque | c Niroshan Dickwella b Kasun Rajitha | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Mushfiqur Rahim | b Kasun Rajitha | 23 | 39 | 4 | 0 | 58.97 |
Liton Das | c & b Asitha Fernando | 52 | 135 | 3 | 0 | 38.52 |
Shakib Al Hasan (vc) | c Niroshan Dickwella b Asitha Fernando | 58 | 72 | 7 | 0 | 80.56 |
Mosaddek Hossain | lbw b Ramesh Mendis | 9 | 22 | 1 | 0 | 40.91 |
Taijul Islam | lbw b Asitha Fernando | 1 | 10 | 0 | 0 | 10.00 |
Ebadot Hossain | not out | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Khaled Ahmed | b Asitha Fernando | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 2 (b 0 , lb 1 , nb 0, w 1, pen 0) |
Total | 162/10 (55.3 Overs, RR: 2.92) |
Fall of Wickets | 1-19 (3.2) Mominul Haque, 2-15 (5.1) Tamim Iqbal, 3-19 (7.2) Najmul Hossain Shanto, 4-23 (9.1) Mahmudul Hasan Joy , 5-53 (20.3) Mushfiqur Rahim, 6-156 (47.5) Liton Das, 7-163 (51.1) Shakib Al Hasan (vc), 8-169 (52.2) Taijul Islam, 9-169 (54.1) Mosaddek Hossain, 10-169 (55.3) Khaled Ahmed, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kasun Rajitha | 12 | 5 | 40 | 2 | 3.33 | |
Asitha Fernando | 17.3 | 5 | 51 | 6 | 2.95 | |
Praveen Jayawickrama | 13 | 0 | 47 | 6 | 3.62 | |
Ramesh Mendis | 11 | 2 | 20 | 1 | 1.82 | |
Dhananjaya de Silva | 2 | 0 | 10 | 0 | 5.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Oshada Fernando | not out | 21 | 9 | 3 | 1 | 233.33 |
Dimuth Karunaratne | not out | 7 | 9 | 1 | 0 | 77.78 |
Extras | 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0) |
Total | 28/0 (3 Overs, RR: 9.33) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Taijul Islam | 1 | 0 | 16 | 0 | 16.00 | |
Shakib Al Hasan | 1 | 0 | 7 | 0 | 7.00 | |
Ebadot Hossain | 1 | 0 | 5 | 0 | 5.00 |