சம்பியன்ஷ் லீக் கால்பந்து தொடர் மற்றும் தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பின் சுபர் லீக் போட்டிகள் திகதிகள் அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த விடயத்தினை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் மற்றும் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் A.S. நாலக்க ஆகியோர் எமது இணையத்தளத்துக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.
>> இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர்கள்
மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் 14 அணிகள் மோதும் சம்பியன்ஷ் லீக் தொடர் எதிர்வரும் 13ம் திகதி ஆரம்பமாகவிருந்தது. எனினும், தொடர் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் குறிப்பிட்ட ஜஸ்வர் உமர், “நாம் குறைந்தது இம்மாத இறுதியிலாவது சம்பியன்ஷ் லீக்கை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம். வெற்றிகரமான தொடராக அமைய அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டின் தற்போதைய சூழ்நிலை விரைவில் சரியாகும் என நம்புகிறேன்” என்றார்.
இதேவேளை, மன்சி தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் கடந்த 9ம் திகதி நடைபெறவிருந்த போதும், நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதுதொடர்பில் குறிப்பிட்ட A.S. நாலக்க, “நாம் தொடரை ஆரம்பித்தோம். எனினும் நாட்டின் தற்போதைய சூழு்நிலையால் தொடரை ஒத்திவைத்துள்ளோம். அதேநேரம், விரைவில் நிர்வாகக்குழு சந்திப்பை மேற்கொண்டு, நாட்டின் சூழ்நிலையை அறிந்து எதிர்கால திகதிகளை அறிவிப்போம்” என்றார்.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<