புதிய கிரிக்கெட் தொடரினை ஆரம்பிக்கும் சஹீட் அப்ரிடி

314

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சஹீட் அப்ரிடி, மெகா ஸ்டார் லீக் (MSL) என்னும் பெயரிலான புதிய T10 லீக் தொடரினை அறிமுகம் செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>>சஞ்சு சம்சனை சுழலால் மிரட்டும் வனிந்து ஹஸரங்க!

இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் முதல் தடவையாக நடாத்தப்படவுள்ள இந்த T10 லீக் தொடரில், சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பங்கெடுப்பும் காணப்படும் என சஹீட் அப்ரிடி, இந்த லீக்கின் அறிமுக நிகழ்வில் குறிப்பிட்டிருக்கின்றார்.

மெகா ஸ்டார் லீக்கானது, ஒரு பொழுதுபோக்கான கிரிக்கெட் லீக்காகும். இது ராவல்பிண்டியில் நடாத்தப்படவிருக்கின்றது.” என சஹீட் அப்ரிடி இந்த தொடரின் அறிமுக நிகழ்வில் குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரம் சஹீட் அப்ரிடி இந்த T10 லீக் தொடரானது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு ஊடகவியாலாளர்கள் போன்றோருக்கு நிதி உதவி வழங்கும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதேநேரம் இந்த T10 லீக் தொடரின் அறிமுக நிகழ்வில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான இன்ஷாமம் உல்-ஹக், வகார் யூனூஸ் மற்றும் முஸ்தாக் அஹமட் போன்ற வீரர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<