லக்னோவ் அணியின் தலைவர் கே.எல். ராஹூலுக்கு அபராதம்

Indian Premier League 2022

360

IPL தொடரில் லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணியின் தலைவர் கே.எல். ராஹுலிற்கு, அவருடைய போட்டிக்கட்டணத்தில் 20 சதவீதம் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

நவி மும்பையில் நேற்று (19) நடைபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், ராஹுல் IPL தொடரின் முதல் நிலை விதிமுறையை மீறியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

>>RCB அணியை வேகத்தால் மிரட்டிய துஷ்மந்த சமீர

இந்தநிலையில் ராஹுலிடம் போட்டி மத்தியஸ்தர் மேற்கொண்ட விசாரணையின் போது, ராஹுல் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டமையின் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ராஹுல் செய்த தவறு குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

அதேநேரம், லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணியின் சகலதுறை வீரர் மார்கஸ் ஸ்டொயினிஸ், முதல் மட்ட விதிமுறையை மீறியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளதுடன், அவருக்கு IPL நிர்வாகம் எச்சரிக்கை  விடுத்துள்ளது.

ஜோஸ் ஹெஷல்வூட் வீசிய பெங்களூர் அணியின் 19வது ஓவரின்போது, நடுவரின் தீர்ப்பு தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தியமை மற்றும் ஆட்டமிழப்பின் போது, விதிமுறையை மீறிய வார்த்தைகளை பயன்படுத்தியமையினால் இந்த எச்சரிக்கை ஸ்டொயினிஸிற்கு விடுக்கப்பட்டுள்ளது.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், லக்னோவ் சுபர் ஜயண்டஸ் அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<