115வது வடக்கின் பெரும் சமர் ஒத்திவைப்பு

115th Battle of the North 2022

366
Battle of the North 115th Encounter postponed

யாழ். மத்தியக் கல்லூரி மற்றும் யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரிகள் மோதவிருந்த 115ஆவது வடக்கின் பெரும் சமர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மத்தியக் கல்லூரியின் ஏற்பாட்டில் இந்த முறை 115ஆவது வடக்கின் பெரும் சமர் இம்மாதம் 7ஆம், 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

>> குசல் மெண்டிஸின் சதம் வீண்; இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது யாழ்ப்பாணம்

இவ்வாறான நிலையில் நாட்டில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக 115வது வடக்கின் பெரும் சமர் ஒத்திவைக்கப்படுவதாக ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதேநேரம், 115வது வடக்கின் பெரும் சமர் நடைபெறவுள்ள திகதிகள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் ஏற்பாட்டுக்குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடக்கின் பெரும் சமர் கடந்த வருடம் கொவிட்-19 தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், 2020ஆம் ஆண்டு நடைபெற்ற 114ஆவது வடக்கின் பெரும் சமரில் இன்னிங்ஸ் வெற்றியை பெற்று யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரி சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<