சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று (12) நிறைவுக்கு வந்தது.
போட்டியின் முதல் நாளில் இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர்களும், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்தியிருந்த நிலையில் 16 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டிருக்கின்றன.
>>கொழும்புக்கு பலம் சேர்த்த லக்ஷிதவின் சகலதுறை ஆட்டம்
பகலிரவு மோதலாக நடைபெறுகின்ற இந்த டெஸ்ட் போட்டி, பெங்களூரில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினைப் பெற்றிருந்தார்.
இப்போட்டிக்கான இலங்கை அணி உபாதை காரணமாக பெதும் நிஸ்ஸங்க, லஹிரு குமார ஆகியோருக்கு ஓய்வு வழங்கியிருக்க, குசல் மெண்டிஸ் மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
மறுமுனையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருக்கும் இந்திய அணி, ஜயந்த் யாதவ்விற்குப் பதிலாக அக்ஷார் பட்டேலினை தமது குழாத்திற்குள் இணைத்திருந்தது.
இலங்கை அணி – திமுத் கருணாரட்ன(தலைவர்), லஹிரு திரிமான்ன, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஞய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், விஷ்வ பெர்னாண்டோ, லசித் எம்புல்தெனிய, பிரவீன் ஜயவிக்ரம
இந்திய அணி – ரோஹித் சர்மா, மயான்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிசாப் பாண்ட், ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஷார் பட்டேல், மொஹமட் சமி, ஜஸ்பிரிட் பும்ரா
இதன் பின்னர் நாணய சுழற்சிக்கு அமைய முதலில் இந்திய அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் மயான்க் அகர்வால் ஆகியோர் களம் வந்தனர். தொடர்ந்து பிரவின் ஜயவிக்ரமவின் அசத்தலான ரன் அவுட்டுடன் இந்திய அணியின் முதல் விக்கெட் பறிபோனது. இந்திய அணியின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்த மயான்க் அகர்வால், வெறும் 4 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.
>> கொல்கத்தா அணியில் விளையாடவுள்ள ஆரோன் பின்ச்
அதன் பின்னர் இந்திய அணியின் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மாவின் விக்கெட் அவர் 15 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் லசித் எம்புல்தெனியவின் பந்துவீச்சில் பறிபோனது. இதன் பின்னர், இந்திய அணியின் மூன்றாம் விக்கெட்டுக்காக விராட் கோஹ்லி மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் நல்ல இணைப்பாட்டம் ஒன்றுக்கு அடித்தளம் போட்டிருந்தனர். 47 ஓட்டங்கள் வரை நீடித்த இந்திய அணியின் மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டம் ஹனுமா விஹாரியின் விக்கெட்டோடு நிறைவுக்கு வந்தது. பிரவின் ஜயவிக்ரமவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த விஹாரி 31 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
விஹாரியின் பின்னர் இந்திய அணியின் முக்கிய வீரரான விராட் கோஹ்லியின் விக்கெட்டும் பறிபோனது. தனன்ஞய டி சில்வாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த கோஹ்லி 23 ஓட்டங்களுடன் ஓய்வறை சென்றார். இதனால் இந்திய அணி முதல் நாளின் தேநீர் இடைவேளைக்கு முன்னர் 86 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
>> இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக அன்டன் ரொக்ஸ்
தொடர்ந்து முதல் நாளின் தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து இந்திய அணிக்காக ரிசாப் பாண்ட் சற்று அதிரடி காட்டி ஓட்டங்களை அதிகரிக்கத் தொடங்கினார். எனினும், பாண்ட்டின் விக்கெட் எம்புல்தெனியவின் சுழலில் வீழ்ந்தது. 26 பந்துகளை எதிர்கொண்ட பாண்ட் 7 பௌண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
பாண்டின் விக்கெட்டின் பின்னர் இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் தடுமாற்றம் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, சடுதியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுக்க தொடங்கியது. எனினும், இந்திய அணிக்காக தனியொருவராக போராடிய ஸ்ரேயாஸ் ஐயர் ஓட்டங்களைச் சேர்க்கத் தொடங்கினார்.
கடைசியில் ஐயரின் விக்கெட்டும் பறிபோக இந்திய கிரிக்கெட் அணி, முதல் நாளின் இராப்போசணத்திற்கு முன்னதாக தமது விக்கெட்டுக்கள் அனைத்தினையும் பறிகொடுத்து 59.1 ஓவர்களில் 252 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சுக்காக எடுத்துக் கொண்டது.
இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் தன்னுடைய 4ஆவது அரைச்சதத்தோடு போராட்ட இன்னிங்ஸினை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் 98 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 10 பெளண்டரிகள் அடங்கலாக 92 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் லசித் எம்புல்தெனிய மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, தனன்ஞய டி சில்வா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
தொடர்ந்து முதல் நாளின் இராப் போசணத்திற்குப் பின்னர், தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணி, இந்திய
அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 85 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றமான நிலையில் காணப்படுகின்றது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் முன்வரிசை வீரர்கள் அனைவரும் பிரகாசிக்கத்தவற, அஞ்செலோ மெதிவ்ஸ் 43 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மறுமுனையில், களத்தில் ஆட்டமிழக்காமல் நிற்கும் நிரோஷன் டிக்வெல்ல 13 ஓட்டங்களுடனும், லசித் எம்புல்தெனிய ஓட்டமேதுமின்றியும் காணப்படுகின்றனர்.
இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் ஜஸ்பிரிட் பும்ரா 3 விக்கெட்டுக்களையும், மொஹமட் சமி 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Rohit Sharma | c Dhananjaya Lakshan b Lasith Embuldeniya | 15 | 25 | 1 | 1 | 60.00 |
Mayank Agarwal | run out (Niroshan Dickwella) | 4 | 7 | 1 | 0 | 57.14 |
Hanuma Vihari | c Niroshan Dickwella b Praveen Jayawickrama | 31 | 81 | 4 | 0 | 38.27 |
Virat Kohli | lbw b Dhananjaya de Silva | 23 | 48 | 2 | 0 | 47.92 |
Rishab Pant | b Lasith Embuldeniya | 39 | 26 | 7 | 0 | 150.00 |
Shreyas Iyer | st Niroshan Dickwella b Praveen Jayawickrama | 92 | 98 | 10 | 4 | 93.88 |
Ravindra Jadeja | c Lahiru Thirimanne b Lasith Embuldeniya | 4 | 14 | 1 | 0 | 28.57 |
Ravichandran Ashwin | c Niroshan Dickwella b Dhananjaya de Silva | 13 | 33 | 1 | 0 | 39.39 |
Axar Patel | b Suranga Lakmal | 9 | 7 | 0 | 1 | 128.57 |
Mohammed Shami | c Dhananjaya de Silva b Praveen Jayawickrama | 5 | 8 | 1 | 0 | 62.50 |
Jasprit Bumrah | b | 0 | 10 | 0 | 0 | 0.00 |
Extras | 17 (b 7 , lb 8 , nb 2, w 0, pen 0) |
Total | 252/10 (59.1 Overs, RR: 4.26) |
Fall of Wickets | 1-10 (1.3) Mayank Agarwal, 2-29 (9.3) Rohit Sharma, 3-76 (26.2) Hanuma Vihari, 4-86 (27.3) Virat Kohli, 5-126 (32.4) Rishab Pant, 6-148 (36.4) Ravindra Jadeja, 7-183 (47.1) Ravichandran Ashwin, 8-215 (49.6) Axar Patel, 9-229 (53.5) Mohammed Shami, 10-252 (59.1) Shreyas Iyer, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 3 | 0 | 18 | 0 | 6.00 | |
Suranga Lakmal | 8 | 3 | 12 | 1 | 1.50 | |
Lasith Embuldeniya | 24 | 2 | 94 | 3 | 3.92 | |
Praveen Jayawickrama | 17.1 | 3 | 81 | 3 | 4.74 | |
Dhananjaya de Silva | 7 | 1 | 32 | 2 | 4.57 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Kusal Mendis | c Shreyas Iyer b Jasprit Bumrah | 2 | 7 | 0 | 0 | 28.57 |
Dimuth Karunaratne | b Mohammed Shami | 4 | 13 | 1 | 0 | 30.77 |
Lahiru Thirimanne | c Shreyas Iyer b Jasprit Bumrah | 8 | 6 | 2 | 0 | 133.33 |
Angelo Mathews | c Rohit Sharma b Jasprit Bumrah | 43 | 85 | 3 | 2 | 50.59 |
Dhananjaya de Silva | lbw b Mohammed Shami | 10 | 24 | 1 | 0 | 41.67 |
Charith Asalanka | c Ravichandran Ashwin b Axar Patel | 5 | 8 | 1 | 0 | 62.50 |
Niroshan Dickwella | c Rishab Pant b Jasprit Bumrah | 21 | 38 | 1 | 0 | 55.26 |
Lasith Embuldeniya | c Rishab Pant b Jasprit Bumrah | 1 | 16 | 0 | 0 | 6.25 |
Suranga Lakmal | b Ravichandran Ashwin | 5 | 9 | 0 | 0 | 55.56 |
Praveen Jayawickrama | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Vishwa Fernando | st b | 8 | 8 | 0 | 0 | 100.00 |
Extras | 1 (b 1 , lb 0 , nb 0, w 0, pen 0) |
Total | 109/10 (35.5 Overs, RR: 3.04) |
Fall of Wickets | 1-2 (2.1) Kusal Mendis, 2-14 (4.2) Lahiru Thirimanne, 3-14 (5.1) Dimuth Karunaratne, 4-28 (11.5) Dhananjaya de Silva, 5-50 (17.3) Charith Asalanka, 6-85 (28.1) Angelo Mathews, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Jasprit Bumrah | 10 | 4 | 24 | 5 | 2.40 | |
Ravichandran Ashwin | 8.5 | 1 | 30 | 2 | 3.53 | |
Mohammed Shami | 6 | 1 | 18 | 2 | 3.00 | |
Ravindra Jadeja | 6 | 1 | 15 | 0 | 2.50 | |
Axar Patel | 5 | 1 | 21 | 1 | 4.20 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Mayank Agarwal | c Dhananjaya de Silva b Lasith Embuldeniya | 22 | 34 | 0 | 0 | 64.71 |
Rohit Sharma | c Angelo Mathews b Dhananjaya de Silva | 46 | 79 | 0 | 0 | 58.23 |
Hanuma Vihari | b Praveen Jayawickrama | 35 | 79 | 0 | 0 | 44.30 |
Virat Kohli | lbw b Praveen Jayawickrama | 13 | 16 | 0 | 0 | 81.25 |
Rishab Pant | c & b Praveen Jayawickrama | 50 | 31 | 0 | 0 | 161.29 |
Shreyas Iyer | lbw b Lasith Embuldeniya | 67 | 87 | 0 | 0 | 77.01 |
Ravindra Jadedja | b Avishka Fernando | 22 | 45 | 0 | 0 | 48.89 |
Ravichandran Ashwin | c Niroshan Dickwella b Praveen Jayawickrama | 13 | 25 | 0 | 0 | 52.00 |
Axar Patel | b | 9 | 10 | 0 | 0 | 90.00 |
Mohammed Shami | not out | 16 | 8 | 0 | 0 | 200.00 |
Extras | 10 (b 8 , lb 1 , nb 1, w 0, pen 0) |
Total | 303/9 (68.5 Overs, RR: 4.4) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Suranga Lakmal | 10 | 2 | 34 | 0 | 3.40 | |
Lasith Embuldeniya | 20.5 | 1 | 87 | 3 | 4.24 | |
Vishwa Fernando | 10 | 2 | 48 | 1 | 4.80 | |
Dhananjaya de Silva | 9 | 0 | 47 | 1 | 5.22 | |
Praveen Jayawickrama | 19 | 2 | 78 | 4 | 4.11 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Lahiru Thirimanne | lbw b Jasprit Bumrah | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Dimuth Karunaratne | b | 107 | 174 | 0 | 0 | 61.49 |
Kusal Mendis | st b | 54 | 30 | 0 | 0 | 180.00 |
Angelo Mathews | b | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Dhananjaya de Silva | c & b | 4 | 21 | 0 | 0 | 19.05 |
Niroshan Dickwella | st b | 12 | 39 | 0 | 0 | 30.77 |
Charith Asalanka | c & b | 5 | 20 | 0 | 0 | 25.00 |
Lasith Embuldeniya | lbw b | 2 | 22 | 0 | 0 | 9.09 |
Suranga Lakmal | b | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Vishwa Fernando | c & b | 2 | 6 | 0 | 0 | 33.33 |
Praveen Jayawickrama | not out | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Extras | 20 (b 16 , lb 3 , nb 1, w 0, pen 0) |
Total | 208/10 (59.3 Overs, RR: 3.5) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Jasprit Bumrah | 9 | 4 | 23 | 3 | 2.56 | |
Mohammed Shami | 6 | 0 | 26 | 0 | 4.33 | |
Ravichandran Ashwin | 19.3 | 3 | 55 | 4 | 2.85 | |
Ravindra Jadedja | 14 | 2 | 48 | 1 | 3.43 | |
Axar Patel | 11 | 1 | 37 | 2 | 3.36 |
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<