Home Tamil இன்னிங்ஸ் தோல்வியினைத் தழுவிய இலங்கை கிரிக்கெட் அணி

இன்னிங்ஸ் தோல்வியினைத் தழுவிய இலங்கை கிரிக்கெட் அணி

265

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மூன்றாம் நாளில் நிறைவுக்கு வந்திருப்பதோடு, இப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

மேலும் இந்த வெற்றியுடன் இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.

>>ஜடேஜாவின் அசத்தல் துடுப்பாட்டம்; தடுமாறும் இலங்கை கிரிக்கெட் அணி

ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டி, மொஹாலியில் ஆரம்பமாகியிருந்தது. நேற்று (05) இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில்  இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் (574) துடுப்பாட்டத்தினை அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் ஆடியிருந்த இலங்கை அணி 108 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் களத்தில் ஆட்டமிழக்காது இருந்த பெதும் நிஸ்ஸங்க 26 ஓட்டங்கள் பெற்றிருக்க, சரித் அசலன்க ஒரு ஓட்டத்துடன் காணப்பட்டிருந்தார்.

இன்று போட்டியின் மூன்றாம் நாளில் தமது முதல் இன்னிங்ஸினைத் தொடர்ந்த இலங்கை அணிக்கு 5ஆம் விக்கெட்டுக்காக சரித் அசலன்க – பெதும் நிஸ்ஸங்க ஜோடி ஆறுதல் இணைப்பாட்டம் (58) ஒன்றினை வழங்கிய போதும், இரண்டாம் நாளில் இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக சரித் அசலன்க மாறினார். ஜஸ்பிரிட் பும்ரா மூலம் LBW முறையில் ஆட்டமிழப்புச் செய்யப்பட்ட சரித் அசலன்க 22 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்திருந்தார்.

அசலன்கவின் விக்கெட்டுக்குப் பின்னர் இந்திய சுழல்பந்துவீச்சாளர்களை சமாளிப்பதில் தடுமாற்றம் கண்ட இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களைப் பறிகொடுத்ததோடு, தமது இறுதி ஆறு விக்கெட்டுக்களையும் 13 ஓட்டங்களுக்குள் பறிகொடுத்து முதல் இன்னிங்ஸில் 174 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

இரண்டாம் நாளின் மதிய போசணத்திற்கு முன்னர் முதல் இன்னிங்ஸின் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்த இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் பெதும் நிஸ்ஸங்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து தன்னுடைய 5ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் 11 பௌண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

>>மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஷேர்ன் வொர்னின் பெயர்

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் ரவிந்திர ஜடேஜா 41 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களைக் கைப்பற்ற, ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

இதன் பின்னர் இந்திய அணியினை விட 400 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணி இரண்டாம் நாளின் மதிய போசணத்தினை அடையும் போது தமது ஆரம்ப வீரர்களில் ஒருவரான லஹிரு திரிமான்னவின் விக்கெட்டினை அவர் ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையில் பறிகொடுத்து 10 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்தவாறு காணப்பட்டிருந்தது.

இரண்டாம் நாளின் மதிய போசணத்திற்குப் பின்னர் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினைத் தொடர்ந்த இலங்கை அணி மிகவும் குறுகிய ஓட்ட இடைவெளிகளில் தமது விக்கெட்டுக்களை பறிகொடுத்து மூன்றாம் நாளின் தேநீர் இடைவேளைக்குப் பின்னர் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களுடன் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியினைத் தழுவியது.

>>பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் ரஹானே, ஹர்திக், புஜாராவுக்கு பின்னடைவு

இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் சார்பில் எதிர்பார்க்கப்பட்ட அனைத்து துடுப்பாட்ட வீரர்களும் ஏமாற்றம் தந்திருக்க, நிரோஷன் டிக்வெல்ல மாத்திரம் அரைச்சதம் ஒன்றினை விளாசி ஆறுதல் தந்திருந்தார். அந்தவகையில் தன்னுடைய 19ஆவது அரைச்சதத்தினைப் பெற்றிருந்த நிரோஷன் டிக்வெல்ல இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 9 பௌண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் இந்திய அணியின் பந்துவீச்சில் இம்முறை ரவிந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, மொஹமட் சமி 2 விக்கெட்டுக்களை சுருட்டி தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்தார்.

போட்டியின் ஆட்டநாயகனாக ரவிந்திர ஜடேஜா தெரிவாகியிருக்க, இந்திய-இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (12) பெங்களூரில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகின்றது.

போட்டியின் சுருக்கம்


Result


Sri Lanka
174/10 (65) & 178/10 (60)

India
574/8 (129.2)

Batsmen R B 4s 6s SR
Mayank Agarwal lbw b Lasith Embuldeniya 33 49 5 0 67.35
Rohit Sharma c Suranga Lakmal b Lahiru Kumara 29 28 6 0 103.57
Hanuma Vihari b Vishwa Fernando 58 128 5 0 45.31
Virat Kohli b Lasith Embuldeniya 45 76 5 0 59.21
Rishabh Pant b Suranga Lakmal 96 97 9 4 98.97
Shreyas Iyer lbw b Dhananjaya de Silva 27 48 3 0 56.25
Ravindra Jadeja not out 175 228 17 3 76.75
Ravichandran Ashwin c Niroshan Dickwella b Suranga Lakmal 61 82 8 0 74.39
Jayant Yadav c Lahiru Thirimanne b Vishwa Fernando 2 18 0 0 11.11
Mohammed Shami not out 20 34 3 0 58.82


Extras 28 (b 4 , lb 12 , nb 12, w 0, pen 0)
Total 574/8 (129.2 Overs, RR: 4.44)
Fall of Wickets 1-52 (9.5) Rohit Sharma, 2-80 (18.3) Mayank Agarwal, 3-170 (43.3) Virat Kohli, 4-175 (46.3) Hanuma Vihari, 5-228 (61.1) Shreyas Iyer, 6-332 (80.5) Rishabh Pant, 7-462 (109.4) Ravichandran Ashwin, 8-471 (113.6) Jayant Yadav,

Bowling O M R W Econ
Suranga Lakmal 25 1 90 2 3.60
Vishwa Fernando 26 1 135 2 5.19
Lahiru Kumara 10.5 1 52 1 4.95
Lasith Embuldeniya 46 3 188 2 4.09
Dhananjaya de Silva 18.2 1 79 1 4.34
Charith Asalanka 3.1 0 14 0 4.52
Batsmen R B 4s 6s SR
Dimuth Karunaratne lbw b Ravindra Jadeja 28 71 5 0 39.44
Lahiru Thirimanne lbw b Ravichandran Ashwin 17 60 1 0 28.33
Pathum Nissanka not out 61 133 11 0 45.86
Angelo Mathews lbw b Jasprit Bumrah 22 39 1 1 56.41
Dhananjaya de Silva lbw b Ravichandran Ashwin 1 8 0 0 12.50
Charith Asalanka lbw b Jasprit Bumrah 29 64 5 0 45.31
Niroshan Dickwella c Shreyas Iyer b Ravindra Jadeja 2 10 0 0 20.00
Suranga Lakmal c Ravichandran Ashwin b Ravindra Jadeja 0 2 0 0 0.00
Lasith Embuldeniya c Mayank Agarwal b Mohammed Shami 0 5 0 0 0.00
Vishwa Fernando c Rohit Sharma b Ravindra Jadeja 0 5 0 0 0.00
Lahiru Kumara b Ravindra Jadeja 0 1 0 0 0.00


Extras 14 (b 0 , lb 6 , nb 8, w 0, pen 0)
Total 174/10 (65 Overs, RR: 2.68)
Fall of Wickets 1-48 (18.2) Lahiru Thirimanne, 2-59 (24.2) Dimuth Karunaratne, 3-96 (33.6) Angelo Mathews, 4-103 (38.1) Dhananjaya de Silva, 5-161 (57.6) Charith Asalanka, 6-164 (60.4) Niroshan Dickwella, 7-164 (60.6) Suranga Lakmal, 8-173 (63.3) Lasith Embuldeniya, 9-174 (64.5) Vishwa Fernando, 10-174 (64.6) Lahiru Kumara,

Bowling O M R W Econ
Mohammed Shami 12 5 27 1 2.25
Jasprit Bumrah 14 3 36 2 2.57
Ravichandran Ashwin 20 7 49 2 2.45
Jayant Yadav 6 2 15 0 2.50
Ravindra Jadedja 13 4 41 5 3.15


Batsmen R B 4s 6s SR
Lahiru Thirimanne c Rohit Sharma b Ravichandran Ashwin 0 9 0 0 0.00
Dimuth Karunaratne c Rishab Pant b Mohammed Shami 27 42 6 0 64.29
Pathum Nissanka c Rishab Pant b Ravichandran Ashwin 6 19 1 0 31.58
Angelo Mathews lbw b 28 75 2 1 37.33
Dhananjaya de Silva c Shreyas Iyer b Ravindra Jadeja 30 58 5 0 51.72
Charith Asalanka c Virat Kohli b Ravichandran Ashwin 20 9 2 2 222.22
Niroshan Dickwella not out 51 81 0 0 62.96
Suranga Lakmal c Jayant Yadav b Ravindra Jadedja 0 3 0 0 0.00
Lasith Embuldeniya c Rishab Pant b Ravindra Jadeja 2 42 0 0 4.76
Vishwa Fernando lbw b Mohammed Shami 0 5 0 0 0.00
Lahiru Kumara c Mohammed Shami b Ravichandran Ashwin 4 14 0 0 28.57


Extras 10 (b 4 , lb 5 , nb 1, w 0, pen 0)
Total 178/10 (60 Overs, RR: 2.97)
Fall of Wickets 1-9 (2.3) Lahiru Thirimanne, 2-19 (6.5) Pathum Nissanka, 3-45 (15.5) Dimuth Karunaratne, 4-94 (32.5) Dhananjaya de Silva, 5-121 (35.3) Charith Asalanka, 6-121 (36.2) Angelo Mathews, 7-121 (36.5) Suranga Lakmal, 8-153 (50.6) Lasith Embuldeniya, 9-170 (53.6) Vishwa Fernando, 10-178 (59.6) Lahiru Kumara,

Bowling O M R W Econ
Ravichandran Ashwin 21 5 47 4 2.24
Mohammed Shami 8 1 48 2 6.00
Ravindra Jadedja 16 5 46 4 2.88
Jayant Yadav 11 3 21 0 1.91
Jasprit Bumrah 4 1 7 0 1.75



முடிவு – இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<