இலங்கை அணியின் முன்னணி சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க, அவுஸ்திரேவியாவிலிருந்து நேரடியாக இன்றைய தினம் (25) நாடு திரும்பியுள்ளார்.
வனிந்து ஹஸரங்க கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், முழுமையாக குணமடையாத காரணத்தால் அவுஸ்திரேலியாவில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.
>>Bhanuka இலங்கை அணியிலிருந்து நீக்கிப்பட்டமை தவறில்லையா?<<
இந்திய தொடருக்கு செல்வதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 பரிசோதனையில், ஹஸரங்கவுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது மீண்டும் உறுதிசெய்யப்பட்டிருந்தது. எனினும், தற்போது பூரண குணமடைந்துள்ள வனிந்து ஹஸங்க இலங்கை திரும்பியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக இன்னும் இரண்டு T20I போட்டிகள் எஞ்சியிருந்தாலும், இந்தியாவின் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய அவரால் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாத காரணத்தால் வனிந்து ஹஸரங்க நாட்டுக்கு திரும்பியுள்ளார்.
சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் T20I போட்டியில் இலங்கை அணி தோல்வியை சந்தித்திருந்த நிலையில், இரண்டாவது போட்டி நாளை (26) தர்மசாலாவில் நடைபெறவுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<