இலங்கை கிரிக்கெட் அணியில் முக்கிய மாற்றங்கள்

588

இலங்கை மற்றும் இந்திய அணிகள் பங்கெடுக்கும் T20I தொடரில் இருந்து, சுழல்பந்துவீச்சாளரான மகீஷ் தீக்ஷன வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>முதல் T20I போட்டியினைப் பறிகொடுத்த இலங்கை அணி

அவுஸ்திரேலிய அணியுடனான T20I தொடரின் இறுதிப் போட்டியில் தசை உபாதைக்கு ஆளாகியிருந்த மகீஷ் தீக்ஷன, இந்திய அணிக்கு எதிரான T20I தொடருக்கான இலங்கை குழாத்தில் பெயரிடப்பட்டிருந்தார்.

எனினும் மகீஷ் தீக்ஷனவிற்கு குறித்த உபாதை முழுமையாக குணமடையாத நிலையில் தற்போது அவர்க இலங்கை – இந்திய அணிகள் பங்கெடுக்கும் T20I தொடரிலிருந்து முழுமையாக வெளியேறியிருக்கின்றார்.

இதேநேரம் ஏற்கனவே உபாதைக்குள்ளான மற்றுமொரு வீரரான ரமேஷ் மெண்டிஸிற்குப் பிரதியீடாக, இலங்கை அணியில் சுழல்பந்துவீச்சாளர் அஷைன் டேனியல் இணைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நட்சத்திர சுழல்வீரரான வனிந்து ஹஸரங்க இல்லாத நிலையில், இலங்கை அணி மகீஷ் தீக்ஷனவினை இழந்திருப்பது இலங்கை அணிக்கு பேரிழப்பாக அமைகின்றது.

>>WATCH – பானுக ராஜபக்ஷவை இலங்கை அணியிலிருந்து நீக்கியது தவறில்லையா?

அதோடு துடுப்பாட்டத்துறையினைப் பலப்படுத்துவதற்கு இலங்கை அணியில் நிரோஷன் டிக்வெல்ல, மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர் இணைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த வீரர்கள் இந்திய அணியுடன் எஞ்சியிருக்கும் T20I போட்டிகளில் ஆடுவதற்கு தகுதி பெற்றிருக்கிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இலங்கை – இந்திய அணிகள் பங்கெடுக்கும் மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றிருக்க, தொடரின் இரண்டாவது போட்டி நாளை (26) தரம்சலாவில் ஆரம்பமாகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<