பாகிஸ்தான் ஒருநாள், T20I தொடர்களுக்கான ஆஸி. குழாம் அறிவிப்பு

Australia tour of Pakistan 20202

509
Australia tour of Pakistan 20202

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டித்தொடருக்கான அவுஸ்திரேலியா குழாத்திலிருந்து ஐந்து முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடாத நிலையில், இவருடன் கிளேன் மெக்ஸ்வேல், பெட் கம்மின்ஸ், ஜோஸ் ஹெஷல்வூட் மற்றும் மிச்சல் ஸ்டார்க் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

>> இந்தியா தொடருக்கான இலங்கை T20I குழாம் அறிவிப்பு

அதேநேரம் விக்கெட் காப்பாளர் மெதிவ் வேட் ஒருநாள் தொடருக்கான குழாத்தில் மாத்திரம் இணைக்கப்பட்டுள்ளதுடன், T20I தொடரில் நீக்கப்பட்டுள்ளதுடன் ஜோஸ் இங்லிஸ் விக்கெட் காப்பாளராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், சீன் எபோட், ஜேசன் பெஹ்ரண்ட்ரொப் மற்றும் நேதன் எல்லிஸ் ஆகியோர் குழாத்தில் இடம்பிடித்துள்ளனர். இவர்களுடன் சகலதுறை வீரர் கெமரூன் கிரீன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணிக்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளார்.

குழாத்தில் பெயரிடப்படாத முன்னணி வீரர்கள் ஐ.பி.எல். தொடருக்கான அணிகளில் இணைக்கப்பட்டுள்ள போதும், அவர்களால் ஏப்ரல் 6ம் திகதிவரை போட்டிகளில் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் விதிமுறைப்படி தேசிய அணிக்கான போட்டிகள் நடைபெறும் போது, ஒப்பந்தம் பெற்றுள்ள வீரர்கள் லீக் தொடர்களில் விளையாட முடியாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்குறித்த வீரர்கள் ஐ.பி.எல். தொடரின் முதல் கட்ட போட்டிகளில் விளையாடமாட்டார்கள் என்பதுடன், மிச்சல் மார்ஷ், ஜேசன் பெஹ்ரண்ட்ரொப், நேதன் எல்லிஸ், மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் சீன் எபோட் ஆகியோர் T20I தொடர் நிறைவடைந்தவுடன் ஐ.பி.எல். தொடரில் இணைந்துக்கொள்வர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் மார்ச் 29ம் திகதி முதல் ஏப்ரல் 02ம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன், T20I போட்டி ஏப்ரல் 5ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியா குழாம் – ஆரோன் பின்ச் (தலைவர்), சீன் எபோட், அஸ்டன் ஆகர், ஜேசன் பெஹ்ரண்ட்ரொப், அலெக்ஸ் கெரி, நேதன் எல்லிஸ், கெமரூன் கிரீன், டிராவிஷ் ஹெட், ஜோஸ் இங்லிஸ், மார்னஸ் லபுச்சேங், மிச்சல் மார்ஷ், பென் மெக்டெர்மோட், கேன் ரிச்சிட்சன், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டொய்னிஸ், அடம் ஷாம்பா

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<