மேல், தென் மாகாணங்களுக்கு இலகு வெற்றி

338
Independence Trophy 2022

மாகாண அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் சுதந்திர கிண்ண கால்பந்து சுற்றுப் போட்டியில் வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்ற போட்டிகளில் மேல் மற்றும் தென் மாகாண அணிகள் வெற்றிகளைப் பதிவு செய்தன.

மேற்கு எதிர் ஊவா  

கண்டி போகம்பரை அரங்கில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் மத்திய களத்தில் இருந்து வழங்கப்பட்ட சிறந்த பந்துப் பரிமாற்றங்களின்மூலம் நவீன் ஜூட் மேல் மாகாண அணிக்கான முதல் இரண்டு கோல்களையும் பெற்றார்.

மீண்டும் இரண்டாம் பாதி ஆரம்பமாகி முதல் 5 நிமிடங்களுக்குள் ஹெடர் மூலம் பெற்ற கோலினால் நவீன் ஜூட் தனது ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்தார்.

மீண்டும், ஷிஷான் பிரபுத்த 60 நிமிடங்களின் பின்னர் மேல் மாகாண அணிக்கான அடுத்த கோலையும் பெற, ஆட்டம் நிறைவில் எதிரணிக்கு எந்த கோலையும் விட்டுக் கொடுக்காத மேல் மாகாண அணியினர் 4-0 என போட்டியில் வெற்றியைப் பதிவு செய்தனர்.

முழு நேரம்: மேற்கு 4 – 0 ஊவா 

கொல் பெற்றவர்கள்

  • மேல் மாகாணம் – நவீன் ஜூட் 19‘ 45+2‘, 49‘, ஷிஷான் பிரபுத்த 64‘

மத்தி எதிர் தெற்கு

நாவலபிடிய ஜயதிலக விளையாட்டரங்கில் இடம்பெற்ற அடுத்த போட்டியின் முதல் 90 நிமிடங்களில் எந்தவொரு கோலும் இரு அணிகளாலும் பெறப்படவில்லை. இந்நிலையில் போட்டியின் உபாதையீடு நேரத்தில் தென் மாகாண அணி வீரர் மதுபிரிய அவ்வணிக்கான வெற்றி கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

எனவே, இந்த வெற்றியினால் தென் மாகாண அணி தரப்படுத்தலில் 7 புள்ளிகளுடன் நான்காம் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

முழு நேரம்: மத்தி 0 – 1 தெற்கு

  • தெற்கு – ADC மதுபிரிய 45+2‘

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<