இலங்கையில் நடைபெற்றுவரும் டயலொக்-SLC தேசிய சுப்பர் லீக் தொடரில் விளையாடும் ஜப்னா அணியில், இலங்கை 19 வயதின் கீழ் அணியின் தலைவர் துனித் வெல்லாகே இணைக்கப்பட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற ஐசிசி இளையோர் உலகக்கிண்ணத்தில் மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்திய துனித் வெல்லாலகே அதிகமாக பேசப்பட்டிருந்தார். இவர், உள்ளூர் கழகமான லங்கன் கிரிக்கெட் கழகத்தில் விளையாடிவரும் நிலையில், இவர் ஜப்னா அணியில் விளையாடுவதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
>> முதல் T20I இல் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெற்றி
துனித் வெல்லாலகே இன்றைய தினம் (11) கண்டியில் வைத்து ஜப்னா அணியுடன் இணைந்துக்கொண்ட நிலையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் காலி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு தகுதிபெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துனித் வெல்லாலகே லங்கன் கிரிக்கெட் கழகத்தின் 23 வயதுக்குட்பட்ட போட்டித்தொடரில் விளையாடியிருந்ததுடன், கடந்த ஆண்டு அந்த அணி சம்பியன் கிண்ணத்தையும் வென்றிருந்தது.
இவ்வாறான நிலையில், புள்ளிப்பட்டியலில் கண்டி அணி முதலிடத்தை பிடித்திருப்பதுடன், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் பெற்றுள்ளது. எனவே, ஜப்னா அணிக்கு அடுத்த இரண்டு போட்டிகளும் முக்கியமான போட்டிகளாக அமைவதுடன், துனித்தின் இணைவு அணிக்கு பலத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்னா அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<