இலங்கை T20I தொடரில் இணைக்கப்பட்ட டேனியல் சேம்ஸ்

369
Daniel Sams

இடதுகை வேகப்பந்துவீச்சாளரான டேனியல் சேம்ஸ், இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் ஆடவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20I தொடருக்குரிய அவுஸ்திரேலிய குழாத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றார்.

>> இலங்கைக்கு எதிரான அவுஸ்திரேலிய T20 குழாம் அறிவிப்பு

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20I தொடர் இம்மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இந்த நிலையில் தொடர் ஆரம்பத்தின் போது அவுஸ்திரேலிய குழாத்தில் உள்வாங்கப்பட்ட துடுப்பாட்டசகலதுறைவீரரான ட்ராவிஸ் ஹெட்டிற்கு, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்காக தெற்கு அவுஸ்திரேலிய அணிக்காக கழகமட்டப் போட்டியொன்றில் விளையாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது.

எனவே டிராவிஸ் ஹெட் குறித்த கழகமட்டப் போட்டியில் விளையாடுவதால், இவரின் பிரதியீட்டு வீரராகவே டேனியல் சேம்ஸ் அவுஸ்திரேலிய T20I அணியில் இணைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் இலங்கை அணிக்கு எதிரான T20I தொடரின் இறுதி இரண்டு போட்டிகளிலும் ட்ராவிஸ் ஹெட் அவுஸ்திரேலிய அணியில் இணை்நது கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> U19 உலகக் கிண்ண பெறுமதிக்க அணியில் துனித் வெல்லாலகே

கடந்த ஆண்டு T20I உலகக் கிண்ணத்தின் போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மேலதிக வீரராக காணப்பட்டிருந்த டேனியல் சேம்ஸ், தனது தாயக அணியினை இதுவரை 4 T20I போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய T20 குழாம்

ஆரோன் பின்ச் (அணித்தலைவர்), அஷ்டன் ஏகார், பேட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசல்வூட், மொய்சஸ் ஹென்ரிக்குஸ், ஜோஸ் இன்ங்லிஸ், பென் மெக்டெர்மோட், கிளன் மெக்ஷ்வெல், ஜை ரிச்சர்ட்ஸன், கேன் ரிச்சர்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித், மிச்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மெத்திவ் வேட், அடம் ஷம்பா, ட்ராவிஸ் ஹெட் (இறுதி இரண்டு T20I போட்டிகளுக்கு மாத்திரம்), டேனியல் சேம்ஸ்

இலங்கை – அவுஸ்திரேலிய T20I தொடர் போட்டி அட்டவணை 

  • பெப்ரவரி 11 – முதல் T20I போட்டி – சிட்னி
  • பெ்பரவரி 13 – இரண்டாவது T20I போட்டி – சிட்னி
  • பெப்ரவரி 15 – மூன்றாவது T20I போட்டி – கென்பர்ரா
  • பெப்ரவரி 18 – நான்காது T20I போட்டி – மெல்பர்ன்
  • பெப்ரவரி 20 – ஐந்தாவது T20I போட்டி – மெல்பர்ன்

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<