அவுஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ஜஸ்டின் லேங்கர் தனது பதவியினை இராஜினமாச் செய்வதற்கான கடிதத்தினை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையிடம் (CA) சமர்ப்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தான் வீரருக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை
ஜஸ்டின் லேங்கர் உடினடி அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியினை இராஜினாமாச் செய்வதனை தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை (04) அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கும், லேங்கரிற்கும் இடையில் பயிற்சியாளர் ஒப்பந்த நீடிப்பு தொடர்பில் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றதோடு அதில் இணக்கப்பாடான ஒரு முடிவு எட்டப்பாடததனை அடுத்தே, ஜஸ்டின் லேங்கர் தனது பதவியினை இராஜினாமா செய்ய கடிதம் வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
லேங்கரின் முகாமையாளராக செயற்படும் ஜேம்ஸ் ஹேன்டர்சன் லேங்கரின் பதவி விலகல் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது கிரிக்கெட் வீரராக இருக்கும் போது ஆஷஸ் டெஸ்ட் தொடரினை அவுஸ்திரேலியா 5-0 எனக் கைப்பற்றிய பின்னர் ஓய்வு பெற்ற ஜஸ்டின் லேங்கர், T20 உலகக் கிண்ணத்தினையும், ஆஷஸ் தொடரினையும் தனது ஆளுகையில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றிய பின்னரே பயிற்றுவிப்பாளர் பதவியினை இராஜினாமா செய்வதாக தெரிவித்திருக்கின்றார்.
இதேநேரம் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரவீரரான ரிக்கி பொண்டிங் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை
ஜஸ்டின் லேங்கரை கையாண்ட விதம் தொடர்பில் தனது அதிருப்தியினை வெளியிட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018ஆம் ஆண்டில் டர்ரன் லேஹ்மானிற்குப் பின்னர் அவுஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான லேங்கரின் இராஜினாமாவிற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கும், லேங்கரிற்கும் இடையிலான புரிந்துணர்வு இல்லாததும் ஒரு காரணம் என குறிப்பிடப்படுகின்றது.
தனன்ஜய டி சில்வாவின் சதத்துடன் ஜப்னா அணிக்கு இலகு வெற்றி
ஜஸ்டின் லேங்கர் இல்லாத நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அதன் தற்காலிக பயிற்சியாளராக இருக்கும் அன்ட்ரூ மெக்டொனால்ட்டின் ஆளுகையில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் உடனான தொடர்களில் விளையாடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20I தொடர் இம்மாதம் 11ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ளதோடு, அதன் பின்னர் அவுஸ்திரேலிய அணி மூவகைப் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் விளையாட பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<