19 வயதின் கீழான கிரிக்கெட் வீரர்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரினுடைய காலிறுதிப் போட்டிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
>>மே.தீவுகளை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இலங்கை
மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகின்ற 2022ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் காலிறுதிப் போட்டியில், எதிர்வரும் புதன்கிழமை (26) இங்கிலாந்து 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்க இளம் வீரர்களை எதிர்கொள்கின்றது. இந்த காலிறுதிப் போட்டி என்டிகுவாவில் இடம்பெறவிருக்கின்றது.
இதேநேரம், குழு D இல் இடம்பெற்ற இலங்கை இளம் கிரிக்கெட் அணி தாம் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்ததோடு, தமது காலிறுதிப் போட்டியில் எதிர்வரும் வியாழக்கிழமை (27) ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கின்றது. இலங்கை – ஆப்கான் இளம் அணிகள் மோதும் போட்டி கூலிட்ஜ் நகரில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணி, உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒன்றின் காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருப்பது ஆறு வருடங்களின் பின்னர் இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மறுமுனையில் மூன்றாவது காலிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் – அவுஸ்திரேலிய 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணிகள் பலப்பரீட்சை நடாத்தவிருக்கின்றன. இந்தப் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) என்டிகுவாவில் இடம்பெறுகின்றது.
>>IPL ஏலத்துக்கு 36 இலங்கை வீரர்கள் பதிவு
19 வயதின் கீழான வீரர்களுக்குரிய உலகக் கிண்ண இறுதிக் காலிறுதிப் போட்டியில், இந்திய அணி எதிர்வரும் சனிக்கிழமை (29) பங்களாதேஷ் வீரர்களை கூலிட்ஜ் நகரில வைத்து எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<