Home Tamil அசத்தல் பந்துவீச்சுடன் ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை

அசத்தல் பந்துவீச்சுடன் ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை

Zimbabwe tour of Sri Lanka 2022

1035
Sri Lanka Cricket

கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அசத்தல் பந்துவீச்சை வெளிப்படுத்திய இலங்கை அணி 184 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்து தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்ததுடன், ஒரு மாற்றத்தை  மேற்கொண்டிருந்தது. நுவான் பிரதீப்புக்கு பதிலாக ரமேஷ் மெண்டிஸ் களமிறங்கியிருக்க, ஜிம்பாப்வே அணியில் மில்டன் ஷும்பா இணைக்கப்பட்டிருந்தார்.

>> முதல் போட்டியை வெற்றியுடன் ஆரம்பித்த இந்திய மஹராஜாஸ் அணி

இலங்கை பதினொருவர்

பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக, சாமிக்க கருணாரத்ன, ஜெப்ரி வெண்டர்சே, துஷ்மந்த சமீர, ரமேஷ் மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன

ஜிம்பாப்வே பதினொருவர்

கிரைக் எர்வின் (தலைவர்),  பர்ல் ரயன், சகப்வா  ரெஜிஸ், டெண்டாய் சதாரா, கைடானோ டகுட்ஸ்வானாஷே, மில்டன் ஷும்பா, வெலிங்டன் மஷகட்ஷா, சிகண்டர்  ரஷா, சீன் வில்லியம்ஸ், என்கிரவா ரிச்சட், பிளெசிஸ் முஷரபாணி

இலங்கை அணியானது குசல் மெண்டிஸ் மற்றும் பெதும் நிஸ்ஸங்கவின் நிதானமான இணைப்பாட்டத்துடன் ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இருப்பினும், குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்து வெளியேறினார்.

தங்களுடைய முதல் விக்கெட்டை இலங்கை அணி 80 ஓட்டங்களுக்கு இழக்க, பெதும் நிஸ்ஸங்க தன்னுடைய இரண்டாவது அரைச்சதத்தை பதிவுசெய்து 55 ஓட்டங்களுடன் ரன்-அவுட் மூலமாக ஆட்டமிழந்தார். இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து கமிந்து மெண்டிஸ் 11 ஓட்டங்களுடன் வெளியேற இலங்கை அணி 107 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் சந்திமால், சரித் அசலங்கவுடன் இணைந்து 42 ஓட்டங்களை பகிர்ந்து 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, அணித்தலைவர் தசுன் ஷானக 15 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். மறுமுனையில் சரித் அசலங்க மாத்திரம் மத்தியவரிசையில் சிறப்பாக ஆடி அரைச்சதத்தை பதிவுசெய்து அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுசேர்த்தார்.

எனினும், சரித் அசலங்க 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இறுதி 10 ஓவர்களில் ஓட்டங்களை குவிக்க இலங்கை அணி தடுமாறியது. ரமேஷ் மெண்டிஸ் 26 ஓட்டங்களை சற்று வேகமாக பெற்றுக்கொடுத்ததுடன், சாமிக்க கருணாரத்ன இறுதிவரை போராடியும் 32 பந்துகளில் 30 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொடுத்தார்.

எனவே, இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சில் ரிச்சட் கிராவா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பம் முதல் நெருக்கடியை கொடுக்கும் வகையில் இலங்கை அணி பந்துவீச்சாளர்கள் பந்துவீசியிருந்தனர்.

குறிப்பாக அணியின் மூன்றாவது ஓவரை வீசிய துஷ்மந்த சமீர ஒரே ஓவரில் ரெஜிஸ் சகப்வா மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்த கிரைக் எர்வின் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி அணிக்கு மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.

இந்த ஆரம்பத்தை பயன்படுத்திக்கொண்ட இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை கைப்பற்ற ஆரம்பித்தனர். அதன்படி, முதல் போட்டியில் சதம் விளாசி சிறந்த ஓட்டக்குவிப்புடன் இருந்த ஷோன் வில்லியம்ஸை, போவ்ல்ட் முறையில் மஹீஷ் தீக்ஷன வீழ்த்தினார்.

ஜிம்பாப்வே அணியின் ஓட்டக்குவிப்பிலிருந்த இரண்டு துடுப்பாட்ட வீரர்களும் ஆட்டமிழந்து வெளியேற, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ச்சியாக தங்களுடைய விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதன்காரணமாக, ஜிம்பாப்வே அணி 52 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து போட்டியின் தோல்விக்கட்டத்தை நெருங்கியது.

இறுதியாக டெண்டாய் சடாரா மற்றும் ரெயான் பேர்ல் ஆகியோர் சிறிய இணைப்பாட்டமொன்றை கட்டியழுப்ப முயன்ற போதும், ஜெப்ரி வெண்டர்சே தன்னுடைய அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த 24.4 ஓவர்கள் நிறைவில் 70 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, ஜிம்பாப்வே அணி 184 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் ஜெப்ரி வெண்டர்சே 4 விக்கெட்டுகளை வீழ்த்த, துஷ்மந்த சமீர மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். இவர்களுடன் மஹீஷ் தீக்ஷன மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோரும் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

எனவே, அதிசிறந்த பந்துவீச்சு பிரதிகள் மற்றும் சரித் அசலங்க, பெதும் நிஸ்ஸங்க ஆகியோரின் அரைச்சதங்களின் உதவிகள் ஊடாக இலகுவாக வெற்றியை பதிவுசெய்து, இலங்கை அணி தொடரை 2-1 என கைப்பற்றியது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக சரித் அசலங்க தெரிவுசெய்யப்பட, தொடர் ஆட்டநாயகனாக பெதும் நிஸ்ஸங்க தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த தொடரில் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி, அடுத்த மாதம் 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Result


Sri Lanka
254/9 (50)

Zimbabwe
70/10 (24.4)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka run out (Wesly Madhevere) 55 66 0 0 83.33
Kusal Mendis c Blessing Muzarabani b Wellington Masakadza 36 51 4 0 70.59
Kamindu Mendis c & b Ryan Burl 11 20 0 0 55.00
Dinesh Chandimal lbw b Sean Williams 17 24 1 0 70.83
Charith Asalanka c Sikandar Raza b Richard Ngarava 52 23 0 0 226.09
Dasun Shanaka c Sikandar Raza b Richard Ngarava 15 23 0 0 65.22
Chamika Karunaratne run out (Ryan Burl) 30 32 0 0 93.75
Ramesh Mendis b Blessing Muzarabani 26 21 2 0 123.81
Dushmantha Chameera c Sean Williams b Richard Ngarava 1 3 0 0 33.33
Jeffery Vandersay not out 3 3 0 0 100.00
Maheesh Theekshana not out 1 2 0 0 50.00


Extras 7 (b 2 , lb 1 , nb 1, w 3, pen 0)
Total 254/9 (50 Overs, RR: 5.08)
Fall of Wickets 1-80 (17.2) Kusal Mendis, 2-101 (22.2) Pathum Nissanka, 3-107 (23.1) Kamindu Mendis, 4-149 (30.6) Dinesh Chandimal, 5-183 (38.4) Dasun Shanaka, 6-241 (47.4) Ramesh Mendis, 7-247 (48.5) Dushmantha Chameera, 8-249 (49.2) Chamika Karunaratne,

Bowling O M R W Econ
Tendai Chatara 7 0 35 1 5.00
Blessing Muzarabani 10 0 63 0 6.30
Richard Ngarava 9 1 46 2 5.11
Wellington Masakadza 10 0 42 1 4.20
Ryan Burl 6 0 26 1 4.33
Sikandar Raza 6 0 33 0 5.50
Sean Williams 2 0 6 1 3.00


Batsmen R B 4s 6s SR
Takudzwanashe Kaitano c Kusal Mendis b Jeffery Vandersay 19 22 2 0 86.36
Regis Chakabva c Charith Asalanka b Dushmantha Chameera 1 4 0 0 25.00
Craig Ervine c Kusal Mendis b Dushmantha Chameera 0 1 0 0 0.00
Sean Williams b Maheesh Theekshana 6 21 0 0 28.57
Milton Shumba c Jeffery Vandersay b Ramesh Mendis 9 22 1 0 40.91
Sikandar Raza c Pathum Nissanka b Chamika Karunaratne 1 5 0 0 20.00
Ryan Burl lbw b Jeffery Vandersay 15 46 1 0 32.61
Wellington Masakadza b Ramesh Mendis 1 4 0 0 25.00
Blessing Muzarabani lbw b Jeffery Vandersay 2 5 0 0 40.00
Tendai Chatara not out 8 15 1 0 53.33
Richard Ngarava c Maheesh Theekshana b Jeffery Vandersay 0 2 0 0 0.00


Extras 8 (b 0 , lb 0 , nb 0, w 8, pen 0)
Total 70/10 (24.4 Overs, RR: 2.84)
Fall of Wickets 1-3 (2.2) Regis Chakabva, 2-3 (2.3) Craig Ervine, 3-20 (7.2) Sean Williams, 4-30 (10.2) Takudzwanashe Kaitano, 5-31 (11.1) Sikandar Raza, 6-41 (15.5) Milton Shumba, 7-48 (17.1) Wellington Masakadza, 8-52 (18.3) Blessing Muzarabani, 9-70 (24.2) Ryan Burl, 10-70 (24.4) Richard Ngarava,

Bowling O M R W Econ
Dushmantha Chameera 5 1 20 2 4.00
Maheesh Theekshana 6 1 10 1 1.67
Jeffery Vandersay 7.4 2 10 4 1.35
Chamika Karunaratne 2 0 4 1 2.00
Ramesh Mendis 4 0 26 2 6.50



>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<