இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான 15 பேர்கொண்ட ஜிம்பாப்வே குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் அணிக்கு தலைமை தாங்கியிருந்த கிரைக் எர்வின், இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் தலைவராக செயற்படவுள்ளார்.
>> மெண்டிஸ், குணத்திலக்க, டிக்வெல்ல மீதான போட்டித்தடை நீக்கம்
அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர்கொண்ட குழாத்தில் இரண்டு அறிமுக வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தகுத்ஸ்வனாஷே கைதானோ மற்றும் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் கிளைட் மடாண்டே ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். இவர்களுடன் சகலதுறை வீரர் டினோ முடோம்போட்ஸி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
சுற்றுலா ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 16, 18 மற்றும் 21ம் திகதிகளில் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வே குழாம்
கிரைக் எர்வின் (தலைவர்), பர்ல் ரயன், சகப்வா ரெஜிஸ், டெண்டாய் சதாரா, ஜாங்வே லுக், கைடானோ டகுட்ஸ்வானாஷே, கிளைட் மடாண்டே, மெதெவர் வெஸ்லி, வெலிங்டன் மஷகட்ஷா, டினோ முடோம்போட்ஸி, பிளெஸ்ஸிங் முசரபானி, என்கிரவா ரிச்சட், சிகண்டர் ரஷா, சீன் வில்லியம்ஸ்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<