இந்த ஆண்டு குவைத்தில் நடைபெறவுள்ள ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை இலக்காகக் கொண்டு நடைபெறவிருந்த கடைசி கட்ட தகுதிகாண் போட்டிகளை ரத்து செய்வதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் தீர்மானித்துள்ளது.
ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் குவைத்தில் நடைபெறவிருந்தது. எனினும். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குறித்த தொடரை காலவரையின்றி ஒத்திவைப்பதற்கு போட்டி ஏற்பாட்டுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனையடுத்து, குறித்த போட்டித் தொடரை இலக்காகக் கொண்டு இம்மாதம் 23ஆம், 24ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த ஆசிய இளையோர் மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகளை ரத்து செய்ய இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
>> ஆசிய இளையோர் தகுதிகாண் போட்டியில் தமிழ் பேசும் வீரர்கள் அபாரம்
எனவே, குறித்த தகுதிகாண் போட்டிகளில் பங்குபெறுவதற்காக வி;ண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக்கொள்ள பணம் செலுத்திய அனைத்து வீரர்களுக்கும் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மெய்வல்லுனர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை இலக்காகக் கொண்டு முதலாவது தகுதிகாண் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<