தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஓவர்களை சரியான நேரத்துக்கு வீசி முடிக்காத காரணத்தால், இந்திய அணியின் வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியானது, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கின்றது.
இளையோர் ஆசியக் கிண்ணம் இந்தியா வசம்
இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஒரு ஓவரை வீச தவறியதன் காரணமாக, இந்திய அணிக்கு ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் இருந்து ஒரு புள்ளி குறைக்கப்பட்டுள்ளதுடன், வீரர்களுக்கு 20 சதவீதம் போட்டிக்கட்டணத்தில் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என ஐசிசி அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் 2.22 சரத்தின்படி, நிர்ணயிக்கப்படும் நேரத்தில், பந்துவீச தவறுவதற்கும், ஓவர்கள் தாமதமாவதற்கும், அணியின் வீரர்களுக்கு ஓவர் ஒன்றிற்கு போட்டிக்கட்டணத்தில் 20 சதவீதம் அபாராதமாக அறவிடப்படும். அதேநேரம், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் விதிமுறைப்படி, ஒரு ஓவருக்கு, தலா ஒவ்வொரு புள்ளிகள் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில், இந்திய அணி தங்களுடைய 3வது ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளியை இந்திய அணி இழந்துள்ளது. இதற்கு முதல் நோட்டிங்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2 புள்ளிகளை இழந்திருந்தது. மொத்தமாக மூன்று புள்ளிகளை இழந்துள்ள இந்திய அணி 53 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளதுடன், முதல் இரண்டு இடங்களை அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் பிடித்துள்ளன.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<