சுகததாஸ விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சுபர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது வாரத்திற்கான முதல் போட்டியில் சீ ஹோக்ஸ் கால்பந்து கழகம் 2-1 என்ற கோல்கள் கணக்கில் ரெட் ஸ்டார் கால்பந்து கழகத்தை வீழ்த்தி தரப்படுத்தலில் முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
இரண்டு ஆணிகளுக்கும் வெற்றி மிக முக்கியம் என்ற நிலையில் ஆரம்பமான இந்தப் போட்டியின் 15ஆவது நிமிடத்தில் ரெட் ஸ்டார் வீரர் ரில்ஹத் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தின்மூலம் மொஹமட் ரஹ்மான் போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.
இந்த கோலின் மூலம் ரஹ்மான் தொடரில் தனது எட்டாவது கோலைப் பெற்று, தொடர்ந்து அதிக கோல் பெற்ற வீரராக முதல் இடத்தில் நீடிக்கின்றார்.
- வெற்றி எதுவுமின்றி தொடரிலிருந்து வெளியேறிய இலங்கை இளையோர் மகளிர் அணி
- ரெட் ஸ்டாரை வீழ்த்திய ரினௌன்; அப் கண்ட்ரி லயன்சிற்கு இறுதி நேர வெற்றி
- ஆகிப்பின் ஹெட்ரிக்குடன் டிபெண்டர்ஸை வீழ்த்திய கொழும்பு
- ஷமோதின் ஹெட்ரிக்குடன் கொழும்பு இலகு வெற்றி: டிபெண்டர்ஸ் – சீ ஹோக்ஸ் மோதல் சமனிலை
- கால்பந்தில் எழுச்சி கண்ட 2021ஆம் ஆண்டு
எனினும் முதல் பாதியின் உபாதையீடு நேரத்தில், அதாவது முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் மொஹமட் ஹஸ்மீர் மத்திய களத்தில் இருந்து எடுத்து வந்து வழங்கிய பந்தினால் கனெஷிரோ, சீ ஹோக்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றார். எனவே, முதல் பாதி தலா ஒரு கோலுடன் சமநிலை பெற்றது.
தொடர்ந்து நடந்த இரண்டாம் பாதியின் 45 நிமிடங்கள்வரை கோல்கள் எதுவும் பெறப்படாத நிலையில், போட்டியின் உபாதையீடு நேரத்தில் சீ ஹோக்ஸ் வீரர் தனுஷ்க மதுசங்க ரெட் ஸ்டார் அணியின் பின்கள வீரரினால் முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட்டார்.
இதன்போது கோல் எல்லையை அண்மித்த வகையில் வலது புறத்தில் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை ஹஸ்மீர் பெற்றார். ஹஸ்மீர் உள்ளனுப்பிய பந்தை தனுஷ்க மதுசங்க கோலுக்கு அண்மையில் இருந்து கம்பங்களுக்குள் செலுத்தி போட்டியின் இறுதி நிமிடத்தில் வெற்றி கோலைப் பெற்றார்.
எனவே, 2-1 என வெற்றி பெற்ற சீ ஹோக்ஸ் அணியினர் சுபர் லீக் தொடரில் 7 போட்டிகளின் நிறைவில் 5 வெற்றிகள் மற்றும் தலா ஒரு சமநிலை, தொல்விகளுடன் 16 புள்ளிகளைப் பெற்று தரப்படுத்தலில் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
ரெட் ஸ்டார் வீரர்கள் 7 போட்டிகளில் 2 வெற்றி, 3 சமநிலை மற்றும் 2 தோல்விகளுடன் 9 புள்ளிகளைப் பெற்று தரப்படுத்தலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
முழு நேரம்: ரெட் ஸ்டார் கா.க 1 – 2 சீ ஹோக்ஸ் கா.க
கோல் பெற்றவர்கள்
ரெட் ஸ்டார் கா.க – மொஹமட் ரஹ்மான் 15’
சீ ஹோக்ஸ் கா.க – மொடொஹிரொ கனெஷிரோ 45+4’, தனுஷ்க மதுசங்க 90+5’
>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<