ஸ்கொட் போலான்டினை டெஸ்ட் குழாத்தில் இணைத்துள்ள அவுஸ்திரேலியா

292

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஆஷஸ் தொடருக்கான தமது அணிக்குழாத்தினுள் வேகப்பந்துவீச்சாளரான ஸ்கொட் போலான்டினை இணைத்திருக்கின்றது.

இந்திய டெஸ்ட் அணியின் உப தலைவராகும் கேஎல் ராகுல்

ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு விளையாடும் சந்தர்ப்பத்தினை ஸ்கொட் போலான்ட் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தலைவரான பேட் கம்மின்ஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்ததோடு, அவ்வணியின் ஏனைய முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜோஸ் ஹேசல்வூட்டும் உபாதைக்கு ஆளாகியிருந்தார். எனவே, இந்த வீரர்கள் மூலம் அணியில் ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டே ஸ்கொட் போலான்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

இரண்டு தடவைகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி

ஸ்கொட் போலான்ட் 2018/19ஆம் ஆண்டின் பருவகாலத்திற்கான மார்ஸ் செப்பீல்ட்  தொடரில் தொடர் நாயகன் விருதினை வென்றிருந்ததோடு, அதன் பின்னர் இந்த கோடைகாலத்திற்கான உள்ளூர் கிரிக்கெட் தொடரில் 2 போட்டிகளில் ஆடி 15 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். இதேநேரம், அவர் அண்மையில் நிறைவடைந்த இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டிகளிலும் திறமையினை வெளிப்படுத்தயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரில் இன்னும் மூன்று போட்டி மீதமிருக்க 2-0 என முன்னிலை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<