லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் இன்று (14) நடைபெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் கண்டி வொரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், லஹிரு குமாரவின் இறுதி ஓவரில் 16 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், சீகுகே பிரசன்ன 3 சிக்ஸர்களை விளாசி கொழும்பு அணிக்கு தொடரில் மூன்றாவது வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த கொழும்பு ஸ்டார்ஸ் அணியினர் முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தனர். அதன்படி, களமிறங்கிய கண்டி வொரியர்ஸ் அணியினர் மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றிருந்தார்கள்.
ஜப்னா கிங்ஸின் அடுத்த போட்டிகளில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய சரித் அசலங்க மற்றும் கெனார் லிவிஸ் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 8 ஓவர்களில் 77 ஓட்டங்களை பகிர்ந்தனர். இதில், சரித் அசலங்க 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழத்தொடங்கின.
குறிப்பாக, கெனார் லிவிஸ் அணியின் துடுப்பாட்டத்தை கட்டியெழுப்பியிருந்ததுடன், துஷ்மந்த சமீரவின் பந்துவீச்சில் 44 பந்துகளுக்கு 62 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தவேளை ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் கண்டி வொரியர்ஸ் அணியினர் விக்கெட்டுகளை பறிகொடுத்ததுடன், ஓட்டவேகமும் குறையத்தொடங்கியது. ஓன்பதாவது ஓவரிலிருந்து 11, 16 மற்றும் 19வது ஓவர்களில் மாத்திரமே கண்டி வொரியர்ஸ் அணியின் விக்கெட்டுகள் வீழ்த்தப்படவில்லை என்பதுடன், இதனைத் தவிர்ந்த ஒவ்வொரு ஓவர்களிலும் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.
இறுதியாக, லஹிரு குமார, பினுர பெர்னாண்டோ மற்றும் நிமேஷ் விமுகத்தி ஆகியோரின் துடுப்பாட்ட உதவியுடன், கடைசி இரண்டு விக்கெட்டுக்களுக்காக 26 ஓட்டங்கள் பகிரப்பட்டது. இதனால், கண்டி வொரியர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில், 9 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பந்துவீச்சில், இந்த தொடரில் சற்று சோபிக்க தவறிவந்த துஷ்மந்த சமீர, 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஏனைய பந்துவீச்சாளர்கள் ஒவ்வொருவரும், தல ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு சிறந்த ஆரம்பம் கிடைக்கவில்லை. முதல் ஓவரில் பெதும் நிஸ்ஸங்க ஓட்டங்களின்றி வெளியேறினார். தொடர்ந்து மந்தமான ஓட்டவேகத்துடன் கொழும்பு அணி துடுப்பெடுத்தாடியதுடன் முதல் ஆறு ஓவர்களில் 32 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டனர்.
அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் அஷான் பிரியன்ஜன் ஆகியோர் குறைந்த வேகத்தில் ஓட்டங்களை பெற்று வெளியேற, கொழும்பு அணி அழுத்தத்திற்கு உள்ளாகியது. எனினும், தினேஷ் சந்திமால் தன்னுடைய அற்புத துடுப்பாட்டத்துடன், 27 பந்துகளுக்கு 44 ஓட்டங்களை குவித்து அணிக்கு நம்பிக்கை கொடுத்திருந்தார்.
பின்னர் 2.1 ஓவர்களுக்கு 37 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய சீகுகே பிரசன்ன அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இவர், முதல் பந்தில் சிக்ஸர் ஒன்றை விளாச, 2 ஓவர்களுக்கு 31 ஓட்டங்கள் தேவைப்பட்டன.
எனவே, 19 ஓவரை வீசிய பினுர பெர்னாண்டோவுக்கு எதிராக கீகுகே பிரசன்னவின் சிக்ஸர் அடங்களாக 15 ஓட்டங்கள் பெறப்பட்டன.
எனவே, இறுதி ஓவரில் 16 ஓட்டங்கள் என்ற நிலை உருவாகியதுடன், லஹிரு குமார பந்துவீச அழைக்கப்பட்டார். இவர், இந்த போட்டியில் ஒரு பந்து ஓவரையும் வீசியிருக்காத நிலையில், முக்கியமான இறுதி ஓவருக்காக அழைக்கப்பட்டார். இதில், முதல் பந்தில் சேர்பன் ரதபோர்ட் ஒரு ஓட்டத்தை பெற, அடுத்த மூன்று பந்துகளிலும் மூன்று சிக்ஸர்களை விளாசி, சீகுகே பிரசன்ன கொழும்பு அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
இதில், சீகுகே பிரசன்ன வெறும் 6 பந்துகளில் 32 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டதுடன், பந்துவீச்சில் நிமேஷ் விமுக்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனவே, இந்த போட்டியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணியினர் தங்களுடைய பிளே-ஓஃப் வாய்ப்பை அதிகரித்துள்ளதுடன், கண்டி வொரியர்ஸ் அணி பிளே-ஓஃப் வாய்ப்பை இழக்கும் தருவாயை நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Kennar Lewis | c Dinesh Chandimal b Dushmantha Chameera | 62 | 44 | 2 | 6 | 140.91 |
Charith Asalanka | c Naveen Ul Haq b Ashan Priyanjan | 28 | 18 | 3 | 1 | 155.56 |
Ahmed Shehzad | c Seekkuge Prasanna b Dushmantha Chameera | 2 | 7 | 0 | 0 | 28.57 |
Angelo Perera | c Angelo Mathews b Dushmantha Chameera | 2 | 3 | 0 | 0 | 66.67 |
Kamindu Mendis | c Pathum Nissanka b Ravi Rampaul | 8 | 12 | 0 | 0 | 66.67 |
Asela Gunarathne | lbw b Seekkuge Prasanna | 2 | 5 | 0 | 0 | 40.00 |
Nishan Madushka Fernando | c Naveen Ul Haq b Ashan Priyanjan | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Sachindu Colombage | c & b Dhananjaya de Silva | 6 | 12 | 0 | 0 | 50.00 |
Nimesh Vimukthi | b Dushmantha Chameera | 12 | 8 | 2 | 0 | 150.00 |
Binura Fernando | not out | 9 | 6 | 1 | 0 | 150.00 |
Lahiru Kumara | not out | 5 | 2 | 1 | 0 | 250.00 |
Extras | 9 (b 4 , lb 0 , nb 0, w 5, pen 0) |
Total | 146/9 (20 Overs, RR: 7.3) |
Fall of Wickets | 1-77 (8.1) Charith Asalanka, 2-82 (9.6) Ahmed Shehzad, 3-97 (11.3) Angelo Perera, 4-103 (11.6) Kennar Lewis, 5-109 (13.5) Asela Gunarathne, 6-110 (14.2) Nishan Madushka Fernando, 7-120 (16.6) Sachindu Colombage, 8-120 (17.2) Kamindu Mendis, 9-136 (19.2) Nimesh Vimukthi, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Ashan Priyanjan | 4 | 1 | 21 | 1 | 5.25 | |
Seekkuge Prasanna | 4 | 0 | 30 | 1 | 7.50 | |
Ravi Rampaul | 4 | 0 | 34 | 1 | 8.50 | |
Naveen Ul Haq | 3 | 0 | 17 | 1 | 5.67 | |
Dushmantha Chameera | 4 | 0 | 35 | 4 | 8.75 | |
Dhananjaya de Silva | 1 | 0 | 4 | 1 | 4.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | st Asela Gunarathne b Nimesh Vimukthi | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Angelo Mathews | c Sachindu Colombage b Nimesh Vimukthi | 29 | 34 | 1 | 2 | 85.29 |
Thikshila de silva | c Angelo Perera b Kamindu Mendis | 15 | 17 | 1 | 1 | 88.24 |
Ashan Priyanjan | c Sachindu Colombage b Nimesh Vimukthi | 15 | 17 | 2 | 0 | 88.24 |
Sherfane Rutherford | not out | 12 | 14 | 1 | 0 | 85.71 |
Dinesh Chandimal | c Nimesh Vimukthi b Sachindu Colombage | 44 | 27 | 1 | 1 | 162.96 |
Seekkuge Prasanna | not out | 32 | 6 | 0 | 5 | 533.33 |
Extras | 3 (b 1 , lb 1 , nb 0, w 1, pen 0) |
Total | 150/5 (19.4 Overs, RR: 7.63) |
Fall of Wickets | 1-1 (0.3) Pathum Nissanka, 2-23 (4.5) Thikshila de silva, 3-59 (11.3) Ashan Priyanjan, 4-61 (12.1) Angelo Mathews, 5-110 (17.5) Dinesh Chandimal, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Nimesh Vimukthi | 4 | 1 | 11 | 2 | 2.75 | |
Binura Fernando | 4 | 1 | 34 | 0 | 8.50 | |
Kamindu Mendis | 4 | 0 | 29 | 1 | 7.25 | |
Angelo Perera | 1 | 0 | 8 | 0 | 8.00 | |
Sachindu Colombage | 4 | 0 | 34 | 1 | 8.50 | |
Charith Asalanka | 2 | 0 | 14 | 1 | 7.00 | |
Lahiru Kumara | 0.4 | 0 | 18 | 0 | 45.00 |
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<