அங்குரார்ப்பண சுபர் லீக் உதைபந்தாட்ட தொடரில் பலம் மிக்க அப்கண்ட்ரி லயன்ஸ் கால்பந்து கழகத்தை புளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 2-1 என வீழ்த்த, நியு யங்ஸ் மற்றும் ரெட் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி 4-4 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் நிறைவுற்றது.
ஞாயிற்றுக்கிழமை (12) குதிரைப் பந்தயத் திடலில் இடம்பெற்ற இந்த இரண்டு போட்டிகளும் சுபர் லீக் தொடரின் ஐந்தாவது வாரத்திற்கான மோதல்களாக இடம்பெற்றன.
நியு யங்ஸ் கா.க எதிர் ரெட் ஸ்டார்ஸ் கா.க
ஞாயிற்றுக்கிழமை (12) மாலை ஆரம்பமான இந்தப் போட்டியின் முதல் 20 நிமிடங்களுக்குள் இரண்டு அணிகளும் தலா ஒரு கோலைப் பெற்றன. எனினும். முதல் பாதி நிறைவடையும்போது ரெட் ஸ்டார்ஸ் வீரர்கள் மேலும் 3 கோல்களைப் பெற்று, முதல் பாதியில் 4-1 என முன்னிலை வகித்தது.
- அப் கண்ட்ரி லயன்ஸை வீழ்த்திய சீ ஹோக்ஸ்; ரினௌன் – புளூ ஸ்டார் மோதல் சமநிலையில்
- டிபெண்டர்ஸ், நியு யங்ஸ் அணிகளுக்கு முதல் வெற்றி
- இலங்கை 19 வயதின்கீ்ழ் மகளிர் கால்பந்து குழாத்தில் நான்கு யாழ் வீராங்கனைகள்
- சுபர் லீக்கில் ரினௌன் அணிக்கு முதல் வெற்றி
- ஷமோதின் ஹெட்ரிக்குடன் கொழும்பு இலகு வெற்றி: டிபெண்டர்ஸ் – சீ ஹோக்ஸ் மோதல் சமனிலை
எனினும், இரண்டாம் பாதி ரெட் ஸ்டார்ஸ் வீரர்களுக்கு அதிர்ச்சி மிக்கதாக இருந்தது. நியு யங்ஸ் முன்கள வீரர்களாக கெலும் சன்ஜய மற்றும் நிகில பெர்னாண்டோ ஆகியோர் 3 கோல்களைப் பகிர்ந்துகொள்ள, போட்டியின் 68ஆவது நிமிடமாகும்போது இரண்டு அணிகளும் தலா 4 கோல்களைப் பெற்றுக்கொண்டன.
எனினும், அதன் பின்னர் இரு அணிகளும் வெற்றி கோலுக்காக போராடிய போதும் மேலதிக கோல்கள் பெறப்படாமையினால் ஆட்டம் 4-4 என சமநிலையில் முடிவுற்றது.
முழு நேரம்: நியு யங்ஸ் கா.க 4 – 4 ரெட் ஸ்டார்ஸ் கா.க
கோல் பெற்றவர்கள்
நியு யங்ஸ் கா.க – தனன்ஜய விஜேசிங்க 6’, இஸ்மயில் அபுமெரெ 24’, மொஹமட் ரில்ஹட் 28’, மொஹமட் ரஹ்மான் 45+3’
ரெட் ஸ்டார்ஸ் கா.க – கெலும் சன்ஜய 19’ 47’ & 52’, நிகில பெர்னாண்டோ 68’
அப்கண்ட்ரி லயன்ஸ் கா.க எதிர் புளூ ஸ்டார் வி.க
ஏற்கனவே வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற இருந்த இந்தப் போட்டி சீரற்ற காலநிலையினால் ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் புளூ ஸ்டார் அணி, அதன் தலைவர் தாரக சில்வா மற்றும் மொஹமட் பசால் போன்ற வீரர்கள் முதல் பதினொருவரில் ஆடாமல், இளம் வீரர்களை அதிகமாகக் கொண்ட அணியாக பலம் மிக்க அப்கண்ட்ரி லயன்ஸ் அணியை எதிர்கொண்டது.
எனினும், போட்டியின் 40 நிமிடங்கள் கடந்த நிலையில் புளூ ஸ்டார் அணிக்கு கிடைத்த பிரீ கிக் வாய்ப்பின்போது ஜெர்ரி ஒம்பெம்பெ மூலம் அவ்வணி முதல் கோலைப் பெற்றது.
தொடர்ந்து இரண்டாம் பாதியின் 53ஆவது நிமிடத்தில் இளம் வீரர் செனால் சந்தேஷ் மூலம் அடுத்த கோலையும் பெற்ற புளூ ஸ்டார் வீரர்கள், இரண்டு கோல்களினால் முன்னிலை பெற்றனர்.
போட்டியின் 70வது நிமிடத்தில் அப்கண்ட்ரி லயன்ஸ் வீரர் புளூ ஸ்டார் அணியின் கோல் எல்லையில் வைத்து முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட்டமையினால் அவ்வணிக்கு பெனால்டிக்கான வாய்ப்பு கிடைத்தது.
இதனை அப்கண்ட்ரி லயன்ஸ் அணியின் கோல் காப்பாளரும் தலைவருமான சுஜான் பெரேரா பெற்று கோலாக்கினார்.
அதன் பின்னர் ஆட்டத்தில் கோல்கள் எதுவும் பெறப்படாமையினால் 2-1 என்ற கோல்கள் கணக்கில் புளூ ஸ்டார் வெற்றி பெற்றது.
முழு நேரம்: அப்கண்ட்ரி லயன்ஸ் கா.க 1 – 2 புளூ ஸ்டார் வி.க
கோல் பெற்றவர்கள்
அப்கண்ட்ரி லயன்ஸ் கா.க – சுஜான் பெரேரா 72′(P)
புளூ ஸ்டார் வி.க – ஜெர்ரி ஒம்பெம்பெ 43′, செனால் சந்தேஷ் 53′ s
>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<