Home Tamil இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த கொழும்பு ஸ்டார்ஸ்

இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த கொழும்பு ஸ்டார்ஸ்

269

கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்று முடிந்த, லங்கா பிரீமியர் லீக் தொடரின் 13 ஆவது லீக் போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 41 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிகள் மோதியிருந்த இந்தப் போட்டி, நேற்று (12) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.

LPL தொடரில் தொடர் வெற்றிகளை குவிக்கும் ஜப்னா கிங்ஸ்

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அஞ்செலோ மெதிவ்ஸ் தான் கொழும்பு ஸ்டார்ஸ் அணியினை வழிநடாத்துகின்ற முதல் போட்டியில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தெரிவு செய்திருந்தார். இதேநேரம் இந்தப் போட்டி மழையின் குறுக்கீடு காரணமாக அணிக்கு 18 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

பின்னர் போட்டியின் நாணய சுழற்சிக்கு அமைவாக முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் களமிறங்கினர்.

பெதும் நிஸ்ஸங்க ஒரு ஓட்டத்தினைப் பெற்ற நிலையில் தனது விக்கெட்டினை சமித் பட்டேலிடம் பறிகொடுத்து கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் முதல் விக்கெட்டாக மாறியிருந்தார். ஆனால், ஏனைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அஞ்செலோ மெதிவ்ஸ், புதிய வீரராக களம் வந்த அஷான் பிரியஞ்சனுடன் இணைந்து கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு 64 ஓட்டங்களை இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாகப் பெற்றுக் கொடுத்தார்.

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் இரண்டாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த அஷான் பிரியஞ்சன் 16 பந்துகளுக்கு 23 ஓட்டங்களைப் பெற்றிருக்க, புதிய வீரர்களாக களம் வந்த டொம் பென்டன் மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோர் ஏமாற்றமான துடுப்பாட்டத்துடன் வெளியேறினர்.

எனினும் அஞ்செலோ மெதிவ்ஸ் தொடர்ச்சியாக ஓட்டங்களை குவித்திருந்ததோடு, தினேஷ் சந்திமாலும் அதிரடியான முறையில் செயற்பட்டு கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் ஓட்டங்களை அதிகரித்திருந்தார்.

இந்த இரண்டு வீரர்களினதும் துடுப்பாட்ட உதவியோடு கொழும்பு ஸ்டார்ஸ் அணி 18 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அஞ்செலோ மெதிவ்ஸ் இந்த LPL தொடரில் பெற்றுக்கொண்ட முதல் அரைச்சதத்துடன் 57 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். மறுமுனையில், தினேஷ் சந்திமால் 14 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்களை எடுத்தார்.

LPL தொடரில் தொடர் வெற்றிகளை குவிக்கும் ஜப்னா கிங்ஸ்

இதேநேரம் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் சமிட் பட்டேல் மற்றும் தனன்ஞய லக்ஷான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 162 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக குசல் மெண்டிஸ், தனுஷ்க குணத்திலக்க ஆகியோர் களமிறங்கினர்.

இந்த வீரர்களில் தனுஷ்க குணத்திலக்க வெறும் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் முதல் விக்கெட்டாக மாற, அதன் பின்னர் களம் வந்த மொஹமட் ஹபீஸ், 51 ஓட்டங்களை கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக குசல் மெண்டிஸ் உடன் இணைந்து இணைப்பாட்டமாகப் பகிர்ந்தார். தொடர்ந்து மொஹமட் ஹபீஸின் விக்கெட் அவர் 16 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சீக்குகே பிரசன்னவின் பந்துவீச்சில் பறிபோனது.

மொஹமட் ஹபீஸின் விக்கெட்டினைத் தொடர்ந்து கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் குறுகிய இடைவெளிகளில் தொடர்ச்சியாக ஆட்டமிழந்ததோடு, குசல் மெண்டிஸ் அதிரடியான முறையில் வெற்றி இலக்கிற்கான பயணத்தில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியினை முன்னேற்றியிருந்தார்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியில் கொவிட்-19 தொற்று

இறுதியில் குசல் மெண்டிஸின் போராட்டமும் வீணாக கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 16.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 121 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் குசல் மெண்டிஸ் இந்தப் பருவகாலத்திற்கான LPL தொடரில் தனது முதல் அரைச்சதத்துடன் 39 பந்துகளில் 7 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 64 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில் நவீன்-உல்-ஹக் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, ரவி ராம்போல் மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் வெற்றியோடு கொழும்பு ஸ்டார்ஸ் அணி, இந்தப் பருவகாலத்திற்கான LPL தொடரில் தம்முடைய இரண்டாவது வெற்றியினைப் பதிவு செய்ய, கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு இப்போட்டி LPL தொடரில் இரண்டாவது தொடர் தோல்வியாக அமைகின்றது.

போட்டியின் ஆட்ட நாயகனாக கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்காக அதிரடியான முறையில் துடுப்பாடிய தினேஷ் சந்திமால் தெரிவானார்.

போட்டியின் சுருக்கம்

முடிவு – கொழும்பு ஸ்டார்ஸ் அணி 41 ஓட்டங்களால் வெற்றி


Result


Galle Gladiators
121/10 (16.5)

Colombo Stars
162/7 (18)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c & b 1 4 0 0 25.00
Angelo Mathews c & b 73 57 0 0 128.07
Ashan Priyanjan c & b 23 16 0 0 143.75
Tom Banton c & b 5 9 0 0 55.56
Seekkuge Prasanna c & b 6 5 0 0 120.00
Dinesh Chandimal c & b 36 14 0 0 257.14
Ravindu Fernando c & b 0 1 0 0 0.00
Dhananjaya de Silva not out 2 2 0 0 100.00
Dushmantha Chameera not out 0 0 0 0 0.00


Extras 16 (b 5 , lb 0 , nb 0, w 11, pen 0)
Total 162/7 (18 Overs, RR: 9)
Bowling O M R W Econ
Mohammad Amir 4 0 23 1 5.75
Samit Patel 4 0 23 2 5.75
Nuwan Thushara 1 0 7 0 7.00
Isuru Udana 4 0 49 1 12.25
Noor Ahmad 3 0 33 1 11.00
Dhananjaya Lakshan 2 0 22 2 11.00


Batsmen R B 4s 6s SR
Kusal Mendis c & b 64 39 0 0 164.10
Danushka Gunathilaka c & b 14 11 0 0 127.27
Mohammad Hafeez c & b 16 20 0 0 80.00
Bhanuka Rajapakse c & b 1 2 0 0 50.00
Samit Patel b 11 8 0 0 137.50
Isuru Udana run out () 4 4 0 0 100.00
Mohammad Shamaaz c & b 2 2 0 0 100.00
Dhananjaya Lakshan c & b 6 8 0 0 75.00
Noor Ahmad c & b 0 2 0 0 0.00
Mohammad Amir b 1 4 0 0 25.00
Nuwan Thushara not out 1 1 0 0 100.00


Extras 1 (b 0 , lb 0 , nb 0, w 1, pen 0)
Total 121/10 (16.5 Overs, RR: 7.19)
Bowling O M R W Econ
Dhananjaya de Silva 1 0 10 0 10.00
Ravi Rampaul 4 0 36 2 9.00
Ashan Priyanjan 2 0 10 1 5.00
Seekkuge Prasanna 4 0 23 2 5.75
Naveen Ul Haq 3.5 0 27 3 7.71
Dushmantha Chameera 2 0 15 1 7.50



மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க