சுற்றுலா இங்கிலாந்து 19 வயது கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை 19 வயது கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற்ற இளையோர் ஒருநாள் தொடரின், இரண்டாவது போட்டியில் இலங்கை இளம் வீரர்கள் 148 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரினையும் 1-1 என சமநிலை செய்திருக்கின்றனர்.
இலங்கை இளையோரினை வீழ்த்திய இங்கிலாந்து 19 வயது கிரிக்கெட் அணி
கொழும்பு SSC மைதானத்தில் இரு அணிகளும் மோதுகின்ற இளையோர் ஒருநாள் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 19 வயது கிரிக்கெட் அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.
இந்த நிலையில், இன்று (03) தொடரின் இரண்டாவது போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை 19 வயது கிரிக்கெட் அணியின் தலைவர் துனித் வெலால்கே முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காகப் பெற்றார்.
அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை 19 வயது கிரிக்கெட் அணி தடுமாற்றம் காட்டிய போதிலும் மத்திய வரிசையில் களம் வந்த பவன் பதிராஜ மற்றும் ரணுத சோமரட்ன ஆகியோர் அபாரமான முறையில் செயற்பட்டு தமது தரப்பின் ஓட்டங்களை அதிகரித்தனர்.
தொடர்ந்து இந்த இரண்டு வீரர்களின் துடுப்பாட்ட உதவியுடன் இலங்கை 19 வயது கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
குணத்திலக்க, டிக்வெல்ல, மெண்டிஸ் ஆகிய மூவரும் மீண்டும் கிரிக்கெட்டில்
இலங்கை 19 வயது கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அபார சதம் விளாசிய பவன் பதிராஜ 131 பந்துகளில் 13 பௌண்டரிகள் அடங்கலாக 113 ஓட்டங்கள் பெற்றார். இதேநேரம், ஆட்டமிழக்காமல் இருந்து இந்த இளையோர் ஒருநாள் தொடரில் இரண்டாவது அரைச்சதத்தினைப் பதிவு செய்த ரணுத சோமரட்ன 79 பந்துகளுக்கு 2 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 58 ஓட்டங்கள் பெற்றிருந்தார். இவர்களோடு அதிரடி காட்டியிருந்த அணித்தலைவர் துனித் வெலால்கே 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் உடன் வெறும் 22 பந்துகளுக்கு 38 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து 19 வயது கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் ஜோசுவா பொய்டன் மற்றும் ரெஹான் அஹ்மட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்கினை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து 19 வயது கிரிக்கெட் அணி, இலங்கை வீரர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 31.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து வெறும் 103 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் படுதோல்வி அடைந்தது.
இங்கிலாந்து 19 வயது கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஜேம்ஸ் ரேவ் மாத்திரம் 50 ஓட்டங்களை எடுத்திருக்க, அவ்வணியின் ஏனைய துடுப்பாட்டவீரர்களில் ஒருவரேனும் 20 ஓட்டங்களை கூட கடந்திருக்கவில்லை.
இலங்கை 19 வயது கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் இங்கிலாந்து இளம் வீரர்களை தனது சுழல் மூலம் புரட்டியெடுத்த வனுஜ சஹான் வெறும் 21 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்க்க, யசிரு ரொட்ரிகோ மற்றும் மதிஷ பத்திரன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Chamindu Wickramasinghe | c James Rew b Joshua Boyden | 7 | 15 | 0 | 0 | 46.67 |
Anjala Bandara | c Tom Prest b Joshua Boyden | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Shevon Daniel | c & b Rehan Ahmed | 18 | 52 | 0 | 0 | 34.62 |
Pawan Pathiraja | c Thomas Aspinwall b Rehan Ahmed | 113 | 131 | 0 | 0 | 86.26 |
Ranuda Somarathne | not out | 58 | 79 | 0 | 0 | 73.42 |
Dunith Wellalage | not out | 38 | 22 | 0 | 0 | 172.73 |
Extras | 17 (b 1 , lb 2 , nb 4, w 10, pen 0) |
Total | 251/4 (50 Overs, RR: 5.02) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Joshua Boyden | 8 | 3 | 42 | 2 | 5.25 | |
Thomas Aspinwall | 6 | 0 | 42 | 0 | 7.00 | |
Tom Prest | 8 | 1 | 23 | 0 | 2.88 | |
Jacob Bethell | 3 | 0 | 28 | 0 | 9.33 | |
Rehan Ahmed | 9 | 1 | 41 | 2 | 4.56 | |
James Coles | 6 | 1 | 19 | 0 | 3.17 | |
Danial Ibrahim | 4 | 0 | 17 | 0 | 4.25 | |
Fateh Singh | 6 | 0 | 36 | 0 | 6.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Jacob Bethell | c Amshi De Silva b Yasiru Rodrigo | 4 | 19 | 0 | 0 | 21.05 |
Tom Prest | lbw b Yasiru Rodrigo | 0 | 3 | 0 | 0 | 0.00 |
George Balderson | c Dulith Wellalage b Wanuja Sahan | 5 | 22 | 0 | 0 | 22.73 |
William Luxton | c & b Matheesha Pathirana | 12 | 27 | 0 | 0 | 44.44 |
James Rew | c Pawan Pathiraja b Dulith Wellalage | 50 | 57 | 0 | 0 | 87.72 |
Danial Ibrahim | lbw b Wanuja Sahan | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Rehan Ahmed | c Wanuja Sahan b Matheesha Pathirana | 3 | 9 | 0 | 0 | 33.33 |
James Coles | st Anjala Bandara b Wanuja Sahan | 5 | 11 | 0 | 0 | 45.45 |
Thomas Aspinwall | lbw b Wanuja Sahan | 5 | 13 | 0 | 0 | 38.46 |
Fateh Singh | c Matheesha Pathirana b Wanuja Sahan | 11 | 16 | 0 | 0 | 68.75 |
Joshua Boyden | not out | 0 | 11 | 0 | 0 | 0.00 |
Extras | 8 (b 0 , lb 0 , nb 0, w 8, pen 0) |
Total | 103/10 (31.4 Overs, RR: 3.25) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Yasiru Rodrigo | 6 | 0 | 18 | 2 | 3.00 | |
Treveen Mathews | 8 | 1 | 27 | 0 | 3.38 | |
Wanuja Sahan | 10 | 4 | 21 | 5 | 2.10 | |
Matheesha Pathirana | 4 | 0 | 20 | 2 | 5.00 | |
Shevon Daniel | 2 | 1 | 16 | 0 | 8.00 | |
Dunith Wellalage | 1.4 | 0 | 1 | 1 | 0.71 |
முடிவு – இலங்கை 19 வயது கிரிக்கெட் அணி 148 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<