இரண்டாவது பருவகாலத்திற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரில் கொழும்பினை பிரதிநிதித்துவம் செய்யும் அணியான கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் புதிய உரிமையாளர்களாக Softlogic ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவருமான அஷோக் பத்திரகே மாறியிருக்கின்றார்.
>> கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பயிற்சியாளராக உமர் குல்
டிசம்பர் மாதம் 05ஆம் திகதி தொடக்கம் மிகவும் கோலகலமாக நடைபெறவுள்ள இரண்டாவது பருவகாலத்திற்கான LPL தொடரில், கொழும்பு ஸ்டார்ஸ் என்கிற புதிய பெயருடன் கொழும்பினை பிரதிநிதித்துவம் செய்கின்ற அணி பங்கேற்கின்றது.
அதன்படி பல நட்சத்திரவீரர்களுடன் இந்த LPL தொடரில் களமிறங்கும் கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் உரிமையாளராக Softlogic ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் அஷோக் பத்திரகே மாறியிருக்கும் நிலையில், LPL தொடரில் பங்கெடுக்கும் அணிகளின் உரிமையாளர்களின் நிறுவனங்களில் Softlogic ஹோல்டிங்ஸ் நிறுவனம் மாத்திரமே இலங்கையினைச் மையமாகக் கொண்டு செயற்படும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
அஷோக் பத்திரகே தலைமையிலான Softlogic ஹோல்டிங்ஸ் நிறுவனம் வியாபாரம், சுகாதாரத்துறை, நிதித்துறை, வாகனங்கள் (Automobile) மற்றும் தகவல் தொடர்பாடல் மற்றும் பொழுதுபோக்கு (Leisure) என இலங்கையில் பல்வேறு தொழில்துறைகளில் முதலீடு செய்து வெற்றிகரமாக வலம் வருகின்ற நிறுவனங்களில் ஒன்றாக காணப்படுகின்றது.
இதேநேரம் கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் உரிமையாளராக மாறியிருக்கும் அஷோக் பத்திரகே, LPL தொடரில் பங்கெடுக்கும் அணிகளில் ஒன்றினை கொள்வனவு செய்தது மகிழ்ச்சி தருவதாக தெரிவித்திருந்ததோடு, அடுத்துவரும் வருடங்களில் இந்த T20 தொடரின் வளர்ச்சியில், புதிய மாற்றங்களிலும் தாமும் இணைந்து பங்களிப்புச் செய்ய விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார்.
>> ஏழு நகரங்களில் நடைபெறவுள்ள அடுத்த T20 உலகக் கிண்ணம்
இதேநேரம் LPL தொடரின் ஏற்பட்டாளர்கள் இலங்கையினைச் சேர்ந்த நிறுவனங்களில் ஒன்று LPL அணிக்கு உரிமையாளர்களாக மாறி இந்த தொடருக்கு ஆதரவு வழங்கிய விடயம் தொடர்பில் மகிழ்ச்சியுடன் காணப்படுவதாக குறிப்பிட்டிருக்கின்றனர்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<