LPL தொடருடன் பங்குதாரர்களாக கைகோர்க்கும் Rario நிறுவனம்

Lanka Premier League 2021

312

இலங்கையில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக்குடன் (LPL), கிரிக்கெட் NFT தளமான ராரியோ (Rario) பிரத்தியேக பங்குதாரர்களாக இணைந்துள்ளது.

கடந்த காலங்களில் NFT தளங்கள் கிரிக்கெட் வட்டாரங்களில் பிரபலமாகிவருவதுடன், தற்போது, இலங்கையின் முதற்தர லீக் தொடரான லங்கா பிரீமியர் லீக்கில்  ராரியோ இணைந்துள்ளது.

ஏழு நகரங்களில் நடைபெறவுள்ள அடுத்த T20 உலகக் கிண்ணம்

Rarioவின் வருகை குறித்து லங்கா பிரீமியர் லீக்கின் விளம்பர நிறுவனமான IPG குழுமத்தின் நிறுவனர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியான அனில் மோஹன் குறிப்பிடுகையில், “Rarioவின் இணைவு, எமது ரசிகர்களை மேலும் ஈர்ப்பதற்கு, புதுமையான வழிகளில் உதவும். Rario இணைவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். கிரிக்கெட் விரும்பிகளுக்கு, புதுமுமையான வகையில், டிஜிட்டல் ஞாபகங்களை வழங்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இதேவேளை, தங்களுடைய இணைவு குறித்து Rario நிறுவனர் அன்கிட் வாத்வா குறிப்பிடுகையில், “Rario விகிதமான அச்சுகளை உடைப்பதற்கும், டிஜிட்டல் சேகரிப்புகள் மூலம் கிரிக்கெட் ஆர்வத்தின் புதிய சகாப்தத்தை உருவாக்குவதற்கும் உறுதிக்கொண்டுள்ளது. எனவே, இத்தகைய முதற்தர லீக்குடன் பங்காளர்களாக இணைவது எங்களுக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது. லங்கா பிரீமியர் லீக் இளம் திறமையை வெளிக்கொண்டுவரும். உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு டிஜிட்டல் சேகரிப்புகளாக, இந்த நினைவுகளை அழியாத மாற்றங்களாக உருவாக்குவோம்” என்றார்.

Rario சர்வதேசத்தில் பல்வேறு தொடர்களுடன் பங்குதாரர்களாக இணைந்து வருகின்றது. குறிப்பாக கரீபியன் பிரீமியர் லீக் மற்றும் அபு தாபி T10 லீக்குகளிலும் கடந்த காலங்களில் Rario இணைந்திருந்தது.

LPL தொடர், டிசம்பர் 5ம் திகதி முதல் 23ம் திகதிவரை நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இம்முறை தொடரின் முதல் சுற்றுப்போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அடுத்த சுற்றுப்போட்டிகள் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளன.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<