ஏழு நகரங்களில் நடைபெறவுள்ள அடுத்த T20 உலகக் கிண்ணம்

628

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள அடுத்த T20 உலகக் கிண்ணத்தொடர், அதாவது 2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தொடர் ஏழு நகரங்களில் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> T20 உலகக் கிண்ணத்திற்கான சிறந்த அணி அறிவிப்பு

2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தொடர் 2022ஆம் ஆண்டின் ஒக்டோபர் 16ஆம் திகதியில் இல் இருந்து நவம்பர் 13 திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், இந்த உலகக் கிண்ணத்தொடரினை நடாத்துவதற்கு அவுஸ்திரேலியா ஏழு நகரங்களினைத் தெரிவு செய்திருக்கின்றது.

அதன்படி அடுத்த T20 உலகக் கிண்ணத் தொடரின் 45 போட்டிகளும் அடிலைட், பிரிஸ்பேன், கீலோங், ஹோபர்ட், மெல்போர்ன், சிட்னி மற்றும் பேர்த் ஆகிய நகரங்களில் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் இந்த T20 உலகக் கிண்ணத்தொடரின் இறுதிப் போட்டி 2022ஆம் ஆண்டின் நவம்பர் 13ஆம் திகதி மெல்பர்னில் நடைபெற, நவம்பர் 09, 10ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள தொடரின் அரையிறுதிப்போட்டிகளுக்கு முறையே சிட்னி, அடிலைட் ஆகிய நகரங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.

தொடரினை நடாத்தும் தொடரின் நடப்புச்சம்பியன் அவுஸ்திரேலியாவுடன் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் அடுத்த T20 உலகக் கிண்ணத்தில் சுபர் 12 சுற்றுக்கு நேரடித்தகுதியினைப் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் இலங்கை, மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளுடன் நமீபியா, ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகள் அடுத்த T20 உலகக் கிண்ணத்தொடரின் முதல் சுற்றில் இந்த தொடருக்கான தகுதிகாண் போட்டிகளின் மூலம் தெரிவு செய்யப்படும் நான்கு அணிகளுடன் விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> ஜப்னா கிங்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் விபரம் வெளியீடு

2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தொடரின் தகுதிகாண் போட்டிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளதோடு அதில் முதல் கட்டப்போட்டிகள் எதிர்வரும் 2022ஆம் ஆண்டின் பெப்பவரி மாதம் ஓமானிலும், அடுத்த கட்டப்போட்டிகள் ஜூன், ஜூலை மாதங்களில் ஜிம்பாப்வேயிலும் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<