SLC தலைவர் பதினொருவர் அணியின் தலைவராகும் சரித் அசலங்க

West Indies tour of Sri Lanka 2021

449

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நான்கு நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டிக்கான, இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தலைவர் பதினொருவர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தின் தலைவராக, T20 உலகக்கிண்ணத்தில் சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்தியிருந்த சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அரையிறுதிக்கு முன் ICU இல் சிகிச்சை பெற்ற ரிஸ்வான்

சரித் அசலங்கவுடன் தனன்ஜய டி சில்வா, பெதும் நிஸ்ஸங்க, சாமிக்க கருணாரத்ன, மினோத் பானுக மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இதில், டெஸ்ட் போட்டிகளில் கடந்த காலங்களில் சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்தியிருந்த ஓசத பெர்னாண்டோ, ரொஷேன் சில்வா, லசித் எம்புல்தெனிய மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோருக்கும் பயிற்சிப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் மற்றும் மே.தீவுகள் அணிகளுக்கு இடையிலான பயிற்சிப்போட்டி, கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நாளைய தினம் (14) ஆரம்பமாகவுள்ளது. அதேநேரம், இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, இம்மாதம் 21ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாவது போட்டி 29ம் திகதி நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் இரண்டும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர்

சரித் அசலங்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, ஓசத பெர்னாண்டோ, தனன்ஜய டி சில்வா, ஓசத பெர்னாண்டோ, தனன்ஜய டி சில்வா, ரொஷேன் சில்வா, மினோத் பானுக, சாமிக்க கருணாரத்ன, அசித பெர்னாண்டோ, கமில் மிஷார, அசித பெர்னாண்டோ, கமில் மிஷார, சாமிக்க குணசேகர, சுமிந்த லக்ஷான், லக்ஷான் சந்தகன், ரமேஷ் மெண்டிஸ், லசித் எம்புல்தெனிய, விஷ்வ பெர்னாண்டோ

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<