இலங்கை A மற்றும் பாகிஸ்தான் A அணிகளுக்கு இடையிலான முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் சீரற்ற காலநிலையால் 39 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
பல்லேகலயில் நடைபெற்று வரும் நான்கு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியின் மூன்றாவது நாளான சனிக்கிழமை (30) பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. எனினும் இந்தப் போட்டிக்கு மழை தொடர்ச்சியாக தடங்கலை ஏற்படுத்தும் நிலையில் மூன்றாம் நாள் ஆட்டமும் குறுகிய காலமே நீடித்தது.
இலங்கை A அணிக்கெதிராக 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார் நஷீம் ஷா
இதில் 70 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்த நிலையில் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் A அணி ஓரு விக்கெட்டைக் கூட இழக்காது ஓட்ட எண்ணிக்கையை 187 ஆக உயர்த்தியது. 35 ஓட்டங்களுடன் களமிறங்கிய அணித் தலைவர் சவுத் ஷகீல் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களை பெற்றார்.
மறுமுனையில் 26 ஓட்டங்களுடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை ஆரம்பித்த ஒமைர் யூசுப் ஆட்ட நேர முடிவில் 78 ஓட்டங்களை பெற்று களத்தில் உள்ளார். இருவரும் விக்கெட்டை பறி கொடுக்காமல் நிதானமாக ஆடுவதை பார்க்க முடிகிறது. ஷகீல் 161 பந்துகளில் 10 பௌண்டரிகளுடன் தனது ஓட்டங்களை பெற்றதோடு யூசுப் 78 ஓட்டங்களை பெற 199 பந்துகளுக்கு முகம்கொடுத்து 9 பௌண்டரிகளை பெற்றார்.
தென்னாபிரிக்காவிடம் போராடி தோல்வியடைந்த இலங்கை!
முன்னதாக இலங்கை A அணி தனது முதல் இன்னிங்ஸில் 141 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 46 ஓட்டங்களால் முதல் இன்னிங்ஸில் பின்தங்கியுள்ளது.
நான்காவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், போட்டியில் மழை குறிக்கிடாத பட்சத்தில் இலங்கை ஏ அணிக்கு நெருக்கடி கொடுக்க பாகிஸ்தான் A அணி முயல வாய்ப்பு உள்ளது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை ஏ அணி – 141/10 (46) – விஷ்வ பெர்னாண்டோ 30*, லஹிரு உதார 23, லசித் எம்புல்தெனிய 22, கமில் மிஷார 20, நஷீம் ஷா 53/5, குர்ராம் ஷஸாத் 25/3, இர்பானுல்லாஹ் ஷா 40/2
பாகிஸ்தான் A அணி – 187/1 (23) – சவுத் ஷகீல் 86*, ஒமைர் யூசுப் 78*, லசித் எம்புல்தெனிய 50/1
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<