Home Tamil தென்னாபிரிக்காவிடம் போராடி தோல்வியடைந்த இலங்கை!

தென்னாபிரிக்காவிடம் போராடி தோல்வியடைந்த இலங்கை!

ICC Men’s T20 World Cup 2021

980
ICC Men’s T20 World Cup 2021

T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்கு எதிரான சுபர் 12 போட்டியில், இறுதிநேர அபாரத்தை காண்பித்த தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக்கொண்டது.

சார்ஜா அரங்கில் இடம்பெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிர்பார்க்கப்பட்ட ஓட்டக்குவிப்பு கிடைக்கவில்லை.

>> மழையின் ஆதிக்கத்தோடு சமநிலையடைந்த 142ஆவது நீலங்களின் சமர்

இலங்கை அணி

குசல் பெரேரா, பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, அவிஷ்க பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ, தசுன் ஷானக (தலைவர்), வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, லஹிரு குமார

தென்னாபிரிக்கா அணி

டெம்பா பவுமா (தலைவர்), குயிண்டன் டி கொக், ரஸ்ஸி வென் டர் டஸன், ரீஷா ஹென்ரிக்ஸ், கேஷவ் மஹாராஜ், எய்டன் மர்க்ரம், டேவிட் மில்லர், என்ரிச் நோக்கியா, டுவைன் பிரிட்டோரியர்ஸ், காகிஸோ ரபாடா, டெப்ரைஷ் ஷம்ஷி

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பெதும் நிஸ்ஸங்க மாத்திரம் அரைச்சதம் கடந்து இறுதிவரை அணிக்காக போராடிய நிலையில், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்க தவறினர்.

பெதும் நிஸ்ஸங்க அதிபட்சமாக 58 பந்துகளில் 72 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஏனைய துடுப்பாட்ட வீரர்களில், சரித் அசலங்க 21 ஓட்டங்களையும், தசுன் ஷானக 11 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் எவரும் இரட்டை இலக்க ஓட்டங்களை பெறவில்லை.

தென்னாபிரிக்க அணிசார்பில், டெப்ரைஷ் ஷம்ஷி மற்றும் டுவைன் பிரிட்டோரியர்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்த, என்ரிச் நோக்கியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணிக்கு, வனிந்து ஹஸரங்கவின்  ஹெட்ரிக்குடன் கடுமையான அழுத்தத்தை இலங்கை அணி கொடுத்த போதும், லஹிரு குமாரவின் இறுதி ஓவரால் இலங்கை அணி வெற்றியை தவறவிட்டது.

இறுதி ஓவருக்கு 15 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், டேவிட் மில்லர் லஹிரு குமாரவின் ஓவருக்கு 2 சிக்ஸர்களை விளாசி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். எனவே, 19.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து தென்னாபிரிக்க அணி வெற்றியிலக்கை அடைந்தது.

தென்னாபிரிக்கா அணிசார்பில் டெம்பா பவுமா 46 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்த போதும், டேவிட் மில்லர் 13 பந்துகளுக்கு 23 ஓட்டங்களையும், எய்டன் மர்க்ரம் 19 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில், வனிந்து ஹஸரங்க 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன் ஹெட்ரிக் சாதனையையும் படைத்திருந்தார்.

இவர் தன்னுடைய 15வது ஓவரின் இறுதிப்பந்தில் எய்டன் மர்க்ரமை ஆட்டமிழக்கச் செய்ததுடன், 18வது ஓவரின் முதலிரண்டு பந்துகளில் டெம்பா பவுமா மற்றும் டுவைன் பிரிட்டோரியர்ஸ் ஆகியோரை வெளியேற்றி ஹெட்ரிக் சாதனையை படைத்தார். இவருக்கு அடுத்தப்படியாக துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக, தென்னாபிரிக்க அணி புள்ளிப்பட்டியலில், 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், இலங்கை அணி தொடர்ந்தும் 4வது இடத்தை தக்கவைத்துள்ளது.


Result


South Africa
146/6 (19.5)

Sri Lanka
142/9 (20)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka not out 72 58 1 0 124.14
Kusal Perera b Anrich Nortje 7 10 1 0 70.00
Charith Asalanka run out () 21 14 0 0 150.00
Bhanuka Rajapaksa c & b Tabraiz Shamsi 0 3 0 0 0.00
Avishka Fernando c & b Tabraiz Shamsi 3 5 0 0 60.00
Wanidu Hasaranga c Aiden Markram b Tabraiz Shamsi 4 5 0 0 80.00
Dasun Shanaka c Dwaine Pretorius b Kagiso Rabada 11 12 0 0 91.67
Chamika Karunaratne c Rassie van der Dussen b Dwaine Pretorius 5 5 0 0 100.00
Dushmantha Chameera b Anrich Nortje 3 4 0 0 75.00
Maheesh Theekshana not out 7 3 0 0 233.33
Lahiru Kumara run out () 0 1 0 0 0.00


Extras 9 (b 0 , lb 7 , nb 0, w 2, pen 0)
Total 142/9 (20 Overs, RR: 7.1)
Fall of Wickets 1-20 (3.5) Kusal Perera,

Bowling O M R W Econ
Aiden Markram 2 0 8 0 4.00
Kagiso Rabada 3 0 22 0 7.33
Anrich Nortje 4 0 27 2 6.75
Keshav Maharaj 4 0 34 0 8.50
Tabraiz Shamsi 4 0 17 2 4.25
Dwaine Pretorius 3 0 17 1 5.67


Batsmen R B 4s 6s SR
Reeza Hendricks c & b Dushmantha Chameera 12 10 0 0 120.00
Quinton de Kock lbw b Dushmantha Chameera 11 12 1 0 91.67
Rassie van der Dussen run out () 16 11 0 0 145.45
Temba Bavuma c Pathum Nissanka b Wanidu Hasaranga 46 46 0 0 100.00
Aiden Markram b Wanidu Hasaranga 19 20 0 0 95.00
David Miller not out 23 13 0 0 176.92
Dwaine Pretorius c Bhanuka Rajapaksa b Wanidu Hasaranga 0 1 0 0 0.00
Kagiso Rabada not out 13 7 0 0 185.71


Extras 6 (b 0 , lb 3 , nb 1, w 2, pen 0)
Total 146/6 (19.5 Overs, RR: 7.36)
Bowling O M R W Econ
Dushmantha Chameera 4 0 27 2 6.75
Maheesh Theekshana 4 0 31 0 7.75
Lahiru Kumara 3.5 0 35 0 10.00
Chamika Karunaratne 3 0 23 0 7.67
Wanidu Hasaranga 4 0 20 3 5.00
Dasun Shanaka 1 0 7 0 7.00



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<