NYC அணிக்கு எதிரான வெற்றியை சுவைத்த Wadduwa Central

Red Bull Campus Cricket Women’s Championship 2021

146

ரெட் புல் பல்கலைக்கழக பெண்கள் கிரிக்கெட் சம்பியன்ஷிப் (Red Bull Campus Cricket Women’s Championship 2021) தொடரில் வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற போட்டியில் Wadduwa Central அணியினர் தேசிய இளைஞர் படை (NYC) அணிக்கு எதிராக 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே, முதல் போட்டியில் ESoft Metro Campus அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்திருந்த நிலையில், Wadduwa Central வீராங்கனைகள் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் களமிறங்கியிருந்தனர்.

>> ரெட் புல் பல்கலைக்கழக பெண்கள் கிரிக்கெட்: ESoft அணிக்கு முதல் வெற்றி

இதன் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற NYC அணித் தலைவி Wadduwa Central அணிக்கு முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை வழங்கினார். அதன்படி, சிறந்த ஆரம்பத்தைப் பெற்ற Wadduwa Central அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகள் முதல் விக்கெட்டுக்காக 85 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

துடுப்பாட்டத்தில் நெத்மி பூர்னா அரைச்சதம் கடந்து 46 பந்துகளில் 55 ஓட்டங்களைக் குவிக்க, Wadduwa Central அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது. NYC அணியின் பந்துவீச்சில் பிரசாதி விஜேசிங்க மற்றும் கவிஷ்க ரொஷான்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பாடிய NYC அணியினர் Wadduwa Central அணியின் ஓப் ஸ்பின் வீராங்கனை நெத்மி குனரத்னவின் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் தடுமாறி, 80 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 67 ஓட்டங்களால் தோல்வி கண்டனர்.

பந்துவீச்சில் மிரட்டிய நெத்மி குனரத்ன 16 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். இவர் 18 பந்துகளை ஓட்டமற்ற பந்துகளாக வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

Wadduwa Central 147/4 (20) – நெத்மி பூர்னா 55(46), நெத்மி குனரத்ன 36(40), பிரசாதி விஜேசிங்க 1/17, கவிஷ்க ரொஷான்தி 1/23

NYC 80/10 (19.4) – பிரசாதி விஜேசிங்க 14(25), 4சுகன்திகா பெர்னாண்டோ 12(18), நெத்மி குனரத்ன 6/16, தரூஷி நிலுஷா 1/7

முடிவு – Wadduwa Central அணி 67 ஓட்டங்களால் வெற்றி

இது ரெட் புல் பல்கலைக்கழக பெண்கள் கிரிக்கெட் சம்பியன்ஷிப் தேசிய மட்ட தொடரின் 3ஆவது கண்காட்சிப் போட்டியாகும். தொடரின் இறுதிப் போட்டி Sky Academy மற்றும் Esoft Metro Campus அணிகளுக்கு இடையில் நாளைய தினம் இடம்பெறும். குறித்த போட்டியை ThePapare.com ஊடாக நேரடியாகப் பார்வையிடலாம்.

<<மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க>>