T20 உலகக் கிண்ணத்தின் சுபர் 12 சுற்றுக்காக பாகிஸ்தான் – இந்திய அணிகள் மோதிய போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
சுபர் 12 சுற்றில் குழு 2 அணிகள் பங்குபெறும் முதல் போட்டியாக பாகிஸ்தான் – இந்திய அணிகள் இடையிலான இந்த மோதல் அமைந்திருந்தது.
>> பானுக, அசலங்கவின் அசத்தலால் அபார வெற்றியை பதிவுசெய்த இலங்கை
துபாய் நகரில் ஆரம்பான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பாபர் அசாம் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்தியாவிற்கு வழங்கினார்.
அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய கிரிக்கெட் அணிக்கு தொடக்கத்திலேயே சஹீன் அப்ரிடி நெருக்கடி உருவாக்கினார். இதனால், இந்திய அணியின் ஆரம்பத்துடுப்பாட்டவீரர்களான ரோஹித் சர்மாவின் விக்கெட் அவர் ஓட்டம் எதனையும் பெறாத நிலையிலும், கே.எல். ராகுல் 03 ஓட்டத்தினை பெற்ற நிலையிலும் பறிபோனது.
பின்னர் இந்திய கிரிக்கெட் அணிக்கு அதன் தலைவர் விராட் கோலி மற்றும் ரிசாப் பாண்ட் ஆகியோர் மத்திய வரிசையில் கைகொடுக்க, இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவர் விராட் கோலி தன்னுடைய 28ஆவது T20 அரைச்சதத்துடன் 49 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்கள் பெற, ரிசப் பாண்ட் 30 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
>> பானுக, அசலங்கவின் அசத்தலால் அபார வெற்றியை பதிவுசெய்த இலங்கை
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் சஹீன் அப்ரிடி 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்ற, ஹசன் அலி 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 152 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்புக்கள் எதுமின்றி பாபர் அசாம் – மொஹமட் ரிஸ்வான் ஜோடியின் இணைப்பாட்டத்தோடு பெற்றுக்கொண்டது.
>> த்ரில் வெற்றியினைப் பதிவு செய்த இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணி
பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த மொஹமட் ரிஸ்வான் 55 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 79 ஓட்டங்கள் பெற, பாபர் அசாம் 52 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணி சார்பில் சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்த சஹீன் அப்ரிடி தெரிவாகினார். இப்போட்டியின் பாகிஸ்தான் அணி இந்த T20 உலகக் கிண்ணத்தொடரினை வெற்றியுடன் ஆரம்பித்திருப்பதோடு, முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக T20 உலகக் கிண்ணப் போட்டியொன்றிலும் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
போட்டியின் சுருக்கம்
இந்தியா – 151/7 (20) விராட் கோலி 57, ரிசப் பாண்ட் 39, சஹீன் அப்ரிடி 31/3, ஹசன் அலி 44/2
பாகிஸ்தான் – 152/0 (17.5) மொஹமட் ரிஸ்வான் 79*, பாபர் அசாம் 68*
முடிவு – பாகிஸ்தான் 10 விக்கெட்டுக்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
KL Rahul | b Shaheen Shah Afridi | 3 | 8 | 0 | 0 | 37.50 |
Rohit Sharma | lbw b Shaheen Shah Afridi | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Virat Kohli | c Mohammad Rizwan b Shaheen Shah Afridi | 57 | 49 | 5 | 1 | 116.33 |
Suryakumar Yadav | c Mohammad Rizwan b Hasan Ali | 11 | 8 | 1 | 1 | 137.50 |
Rishabh Pant | c & b Shadab Khan | 39 | 30 | 2 | 2 | 130.00 |
Ravindra Jadedja | c Mohammad Nawaz b Hasan Ali | 13 | 13 | 1 | 0 | 100.00 |
Hardik Pandya | c Babar Azam b Haris Rauf | 11 | 8 | 2 | 0 | 137.50 |
Bhuvneshwar Kumar | not out | 5 | 4 | 0 | 0 | 125.00 |
Mohammed Shami | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 12 (b 6 , lb 1 , nb 1, w 4, pen 0) |
Total | 151/7 (20 Overs, RR: 7.55) |
Fall of Wickets | 1-0 (0.4) Rohit Sharma, 2-0 (2.1) KL Rahul, 3-0 (5.4) Suryakumar Yadav, 4-0 (12.2) Rishabh Pant, 5-0 (17.5) Ravindra Jadedja, 6-0 (18.4) Virat Kohli, 7-0 (19.3) Hardik Pandya, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Shaheen Shah Afridi | 4 | 0 | 31 | 3 | 7.75 | |
Imad Wasim | 2 | 0 | 10 | 0 | 5.00 | |
Hasan Ali | 4 | 0 | 44 | 2 | 11.00 | |
Shadab Khan | 4 | 0 | 22 | 1 | 5.50 | |
Mohammad Hafeez | 2 | 0 | 12 | 0 | 6.00 | |
Haris Rauf | 4 | 0 | 25 | 1 | 6.25 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Mohammad Rizwan | not out | 78 | 55 | 6 | 3 | 141.82 |
Babar Azam | not out | 68 | 52 | 6 | 2 | 130.77 |
Extras | 6 (b 0 , lb 2 , nb 0, w 4, pen 0) |
Total | 152/0 (17.5 Overs, RR: 8.52) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Bhuvneshwar Kumar | 3 | 0 | 25 | 0 | 8.33 | |
Mohammed Shami | 3.5 | 0 | 42 | 0 | 12.00 | |
Jasprit Bumrah | 3 | 0 | 22 | 0 | 7.33 | |
Varun Chakravarthy | 4 | 0 | 33 | 0 | 8.25 | |
Ravindra Jadedja | 4 | 0 | 28 | 0 | 7.00 |