ICC T20 உலகக் கிண்ணத் தொடரின் சுபர் 12 சுற்றின் தனது முதல் போட்டியில், சரித் அசலங்க மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோரின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வெளிப்படுத்தலுடன் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவுசெய்துள்ளது..
சார்ஜா சர்வதேச அரங்கில் இடம்பெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி, களமிறங்கிய பங்களாதேஷ் அணி மிகச்சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 171 ஓட்டங்களை குவித்துக்கொண்டது.
>> சுபர் 12 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் சந்திக்கவுள்ள சவால்கள்
இலங்கை அணி
குசல் பெரேரா, பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, அவிஷ்க பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ, தசுன் ஷானக (தலைவர்), வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, பினுர பெர்னாண்டோ, துஷ்மந்த சமீர, லஹிரு குமார
பங்களாதேஷ் அணி
மொஹமட் நயீம், லிடன் டாஸ், சகீப் அல் ஹஸன், மொஹ்மதுல்லாஹ் (தலைவர்), முஷ்பிகூர் ரஹீம், நூருல் ஹாஸன், அபிப் ஹொஸைன், மெஹிதி ஹாஸன், மொஹமட் சய்புதீன், நசும் அஹ்மட், முஷ்தபிசூர் ரஹ்மான்
பங்களாதேஷ் அணியின் ஆரம்பத்தை பொருத்தவரை அந்த அணிக்கு மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. மொஹமட் நயீம் மற்றும் லிடன் டாஸ் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும், லிடன் டாஸ், லஹிரு குமாரவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அனுபவ வீரர் சகிப் அல் ஹஸன் 10 ஓட்டங்களை பெற்று சாமிக்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
எனினும், மொஹமட் நயீம் மற்றும் அடுத்து களமிறங்கிய முஷ்பிகூர் ரஹீம் ஜோடி பங்களாதேஷ் அணிக்காக மிகச்சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடினர். இவர்கள் இருவரும் விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் ஓட்டங்களை குவித்தனர்.
இதில் மொஹமட் நயீம் அரைச்சதம் கடக்க, முஷ்பிகூர் ரஹீம் வேகமாக ஓட்டங்களை குவித்தார். நயீம் அதிகபட்சமாக 62 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய முஷ்பிகூர் ரஹீம், 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இவர்களுடன், ஏனைய துடுப்பாட்ட வீரர்களும் பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார, சாமிக்க கருணாரத்ன மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் மிகவும் கடினமான ஓட்ட எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சரித் அசலங்க மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால், 18.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
ஆரம்பத்தில் 2 ஓட்டங்களுக்கு குசல் பெரேராவின் விக்கெட்டினை இழந்து இலங்கை தடுமாறிய போதும், சரித் அசலங்க மற்றும் பெதும் நிஸ்ஸங்க சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கினர். இரண்டாவது விக்கெட்டுக்காக இவர்கள் இருவரும் 69 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த போதும், பெதும் நிஸ்ஸங்க 24 ஓட்டங்களை பெற்ற நிலையில் சகிப் அல் ஹஸனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து களமிறங்கிய அவிஷ்க பெர்னாண்டோவும், இதே ஓவரில் ஓட்டமேதுமின்றி ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய வனிந்து ஹஸரங்க அடுத்த ஓவரில் ஆட்டமிழக்க, இலங்கை அணி 79 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், அடுத்ததாக களமிறங்கிய பானுக ராஜபக்ஷ, சரித் அசலங்கவுடன் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.
பானுக ராஜபக்ஷ 31 பந்துகளில் 53 ஓட்டங்களை விளாசி, அணியை சிறந்த நிலைக்கு அழைத்துச்சென்று ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய சரித் அசலங்க 49 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்களை குவித்தார். எனினும், இந்த இரண்டு வீரர்களினதும் தலா ஒரு பிடியெடுப்புக்களை பங்களாதேஷ் வீரர்கள் தவறவிட்டிருந்தமை இலங்கைக்கு அதிஷ்டமாக அமைந்தது.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், நசும் அஹமட் மற்றும் சகீப் அல் ஹஸன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதேவேளை, இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக, இலங்கை அணி சுபர் 12 சுற்றின் முதல் வெற்றியை பதிவுசெய்து, புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Mohammad Naim Sheikh | c & b Binura Fernando | 62 | 52 | 6 | 0 | 119.23 |
Liton Das | c Dasun Shanaka b Lahiru Kumara | 16 | 16 | 2 | 0 | 100.00 |
Shakib Al Hasan (vc) | b Chamika Karunaratne | 10 | 7 | 2 | 0 | 142.86 |
Mushfiqur Rahim | not out | 57 | 37 | 3 | 2 | 154.05 |
Afif Hossain | run out () | 7 | 6 | 2 | 0 | 116.67 |
Mahmudullah | not out | 10 | 5 | 0 | 0 | 200.00 |
Extras | 9 (b 2 , lb 3 , nb 3, w 1, pen 0) |
Total | 171/4 (20 Overs, RR: 8.55) |
Fall of Wickets | 1-40 (5.5) Liton Das, 2-56 (7.4) Shakib Al Hasan (vc), 3-129 (16.1) Mohammad Naim Sheikh, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Chamika Karunaratne | 3 | 0 | 12 | 1 | 4.00 | |
Binura Fernando | 3 | 0 | 27 | 1 | 9.00 | |
Dushmantha Chameera | 4 | 0 | 41 | 0 | 10.25 | |
Lahiru Kumara | 4 | 0 | 29 | 1 | 7.25 | |
Charith Asalanka | 1 | 0 | 14 | 0 | 14.00 | |
Wanidu Hasaranga | 3 | 0 | 29 | 0 | 9.67 | |
Dasun Shanaka | 2 | 0 | 14 | 0 | 7.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Kusal Perera | b Nasum Ahmed | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Pathum Nissanka | b Shakib Al Hasan (vc) | 24 | 20 | 1 | 1 | 120.00 |
Charith Asalanka | not out | 80 | 49 | 5 | 5 | 163.27 |
Avishka Fernando | b Shakib Al Hasan (vc) | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Wanidu Hasaranga | c Mohammad Naim Sheikh b Mohammad Saifuddin | 6 | 5 | 1 | 0 | 120.00 |
Bhanuka Rajapaksa | b Nasum Ahmed | 53 | 31 | 3 | 3 | 170.97 |
Dasun Shanaka | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 7 (b 0 , lb 0 , nb 0, w 7, pen 0) |
Total | 172/5 (18.5 Overs, RR: 9.13) |
Fall of Wickets | 1-2 (0.4) Kusal Perera, 2-71 (8.1) Pathum Nissanka, 3-71 (8.4) Avishka Fernando, 4-79 (9.4) Wanidu Hasaranga, 5-165 (18.5) Bhanuka Rajapaksa, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Nasum Ahmed | 2.5 | 0 | 29 | 2 | 11.60 | |
Mehidy Hasan Miraz | 4 | 0 | 30 | 0 | 7.50 | |
Mohammad Saifuddin | 3 | 0 | 38 | 1 | 12.67 | |
Shakib Al Hasan | 3 | 0 | 17 | 2 | 5.67 | |
Mustafizur Rahman | 3 | 0 | 22 | 0 | 7.33 | |
Mahmudullah | 2 | 0 | 21 | 0 | 10.50 | |
Afif Hossain | 1 | 0 | 15 | 0 | 15.00 |
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<