அயர்லாந்து அணிக்கெதிரான T20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் நமீபியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டியது.
தனது ஆரம்பப் போட்டியில் இலங்கையிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த நமீபியா அணி, இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி சுபர் 12 சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியது.
இந்த நிலையில், அயர்லாந்து அணிக்கெதிராக இன்று நடைபெற்ற தீர்மானமிக்க 3ஆவது போட்டியில் 8 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய நமீபியா அணி. T20 உலகக் கிண்ண வரலாற்றில் முதல் முறையாக சுபர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றது.
T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றின் 11ஆவது லீக் போட்டியில் அயர்லாந்து – நமீபியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.
சார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பாடத்தை தெரிவு செய்தது.
நெதர்லாந்தை வீழ்த்திய நமீபியாவுக்கு வரலாற்று வெற்றி
இதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு ஆரம்ப வீரர்களான போல் ஸ்டெர்லிங் – கெவின் ஓ பிரையன் ஜோடி அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தது.
இதில் அதிரடியாக ஆடிய போல் ஸ்டெர்லிங் 24 பந்துகளில் 38 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து கெவின் ஓ பிரையனும் 24 பந்துகளில் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த அணித்தலைவர் அன்டி பால்பேர்னி 21 ஓட்டங்கள் எடுத்தார். அதன்பின்னர் களமிறங்கிய பின்வரிசை வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்கள் மட்டுமே பெற்றுக்கொண்டது.
நமீபியா அணியின் பந்துவீச்சில் ஜன் ப்ரைலின்க் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், டேவிட் வீஸி 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்
ஓமானை வீழ்த்தி சுபர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றது ஸ்கொட்லாந்து
இதனையடுத்து 126 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி, அணித் தலைவர் கெஹார்ட் எராஸ்மஸின் அரைச்சதத்தின் உதவியால் 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட் வித்தியாசத்தில் மிக இலகுவாக வெற்றியீட்டியது.
இதில் அணித் தலைவர் கெஹார்ட் எராஸ்மஸ் 53 ஓட்டங்களையும், டேவிட் வீஸி 28 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இதன்படி, T20 உலகக் கிண்ணத்தில் முதல் முறையாக பங்கேற்றுள்ள ஐசிசி இன் அங்கத்துவ நாடான நமீபியா அணி, தமது முதல் T20 உலகக் கிண்ணத்திலேயே சுபர் 12 சுற்றுக்குத் தகுதிபெற்று வரலாறு படைத்தது.
சகீப் அல் ஹஸனின் சகலதுறை பிரகாசிப்பால் சுபர் 12 சுற்றில் பங்களாதேஷ்!
அதுமாத்திரமின்றி, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய 3 அணிகளும் சுபர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், நான்காவது அணியாக நமீபியா அணி சுபர் 12 சுற்றுக்குள் நுழைந்தது.
இதனிடையே, T20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் A குழுவில் இடம்பிடித்த நமீபியா அணி, 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று குறித்த குழுவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.
இதன்படி, நாளை (23) முதல் ஆரம்பமாகவுள்ள சுபர் 12 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ள முதலாவது குழுவில் விளையாட நமீபியா அணி தகுதிபெற்றது.
போட்டியின் சுருக்கம்
அயர்லாந்து அணி – 125/8 (20) – போல் ஸ்டெர்லிங் 38, கெவின் ஓ பிரையன் 25, அன்டி பால்பேர்னி 21, ஜன் ப்ரைலின்க் 21/3, டேவிட் வீஸி 22/2
நமீபியா அணி – 126/2 (18.3) – கெஹார்ட் எராஸ்மஸ் 53*, டேவிட் வீஸி 28*, சேன் கிறீன் 24, கர்டிஸ் சாம்பர் 14/2
முடிவு – நமீபியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Paul Stirling | c Bernard Scholtz b Jan Nicol Loftie-Eaton | 38 | 24 | 5 | 1 | 158.33 |
Kevin O’Brien | c Zane Green b Jan Frylinck | 25 | 24 | 2 | 0 | 104.17 |
Andy Balbirnie | lbw b Jan Frylinck | 21 | 27 | 2 | 0 | 77.78 |
Gareth Delany | b David Wiese | 9 | 18 | 0 | 0 | 50.00 |
Curtis Campher | b Jan Frylinck | 4 | 5 | 0 | 0 | 80.00 |
Harry Tector | c Zane Green b David Wiese | 8 | 6 | 1 | 0 | 133.33 |
Neil Rock | b JJ Smit | 5 | 5 | 0 | 0 | 100.00 |
Mark Adair | run out () | 5 | 5 | 0 | 0 | 100.00 |
Simi Singh | not out | 5 | 4 | 0 | 0 | 125.00 |
Craig Young | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 4 (b 0 , lb 1 , nb 0, w 3, pen 0) |
Total | 125/8 (20 Overs, RR: 6.25) |
Fall of Wickets | 1-62 (7.2) Paul Stirling, 2-67 (8.4) Kevin O’Brien, 3-94 (14.2) Gareth Delany, 4-101 (16.1) Andy Balbirnie, 5-104 (16.6) Curtis Campher, 6-110 (17.4) Harry Tector, 7-116 (18.4) Neil Rock, 8-121 (19.4) Mark Adair, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Ruben Trumpelmann | 3 | 0 | 18 | 0 | 6.00 | |
David Wiese | 4 | 0 | 22 | 2 | 5.50 | |
JJ Smit | 4 | 0 | 27 | 1 | 6.75 | |
Bernard Scholtz | 3 | 0 | 25 | 1 | 8.33 | |
Jan Frylinck | 4 | 0 | 21 | 3 | 5.25 | |
Pikky Ya France | 2 | 0 | 11 | 0 | 5.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Craig Williams | c Kevin O’Brien b Curtis Campher | 15 | 16 | 3 | 0 | 93.75 |
Zane Green | c Kevin O’Brien b Curtis Campher | 24 | 32 | 1 | 0 | 75.00 |
Gerhard Erasmus | not out | 53 | 49 | 3 | 1 | 108.16 |
David Wiese | not out | 28 | 14 | 1 | 2 | 200.00 |
Extras | 6 (b 1 , lb 1 , nb 0, w 4, pen 0) |
Total | 126/2 (18.3 Overs, RR: 6.81) |
Fall of Wickets | 1-25 (5.1) Craig Williams, 2-73 (13.2) Zane Green, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Josh Little | 4 | 0 | 22 | 0 | 5.50 | |
Craig Young | 3.3 | 0 | 33 | 0 | 10.00 | |
Mark Adair | 1.4 | 0 | 12 | 0 | 8.57 | |
Curtis Campher | 3 | 0 | 14 | 2 | 4.67 | |
Kevin O’Brien | 2.2 | 0 | 15 | 0 | 6.82 | |
Simi Singh | 4 | 0 | 28 | 0 | 7.00 |