Home Tamil ஓமான் T20 தொடரினைக் கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணி

ஓமான் T20 தொடரினைக் கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணி

277

சுற்றுலா இலங்கை மற்றும் ஓமான் அணிகள் இடையிலான இரண்டாவது T20 போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருக்கின்றது.

இப்போட்டியின் வெற்றியோடு இலங்கை கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடரினையும் 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

T20 உலகக் கிண்ணம் 2010 இன் ‘Run Machine’ மஹேல ஜயவர்தன

இலங்கை கிரிக்கெட் அணி T20 உலகக் கிண்ணத்திற்கு முன்னர் இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஓமான் அணியுடன் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டு ஓமானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை – ஓமான் அணிகள் இடையிலான முதல் T20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று T20 தொடரில் 1-0 என முன்னிலை அடைந்த நிலையில் தொடரின் இரண்டாவது T20 போட்டி இன்று (09) மஸ்கட் நகரில் ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை T20 அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை ஓமான் அணிக்கு வழங்கியிருந்தார்.

இப்போட்டிக்கான இலங்கை அணி கமிந்து மெண்டிஸ், நுவான் பிரதீப் ஆகியோருக்குப் பதிலாக பினுர பெர்னாண்டோ மற்றும் சரித் அசலன்க ஆகியோரினை அணியில் இணைத்திருந்தது.

இலங்கை XI – அவிஷ்க பெர்னாண்டோ, பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க (தலைவர்), சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஷண, தினேஷ் சந்திமால், சரித் அசலன்க, பினுர பெர்னாண்டோ, லஹிரு குமார, அகில தனன்ஞய, பெதும் நிஸ்ஸங்க

ஓமான் XI – ஷீசான் மக்சூத் (தலைவர்), நஸீம் குஷீ, ஜடின்தர் சிங், ஆகிப் இல்யாஸ், மொஹமட் நதீம், அயான் கான், சந்தீப் கவுட், கலீமுல்லா, கஷ்யப் ராஜபாட்டி, பய்யாஸ் பட், பிலால் கான்

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சிக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய ஓமான் அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை குவித்தனர்.

ஓமான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிரடியாக ஆடி அரைச்சதம் விளாசியிருந்த ஆகிப் இல்யாஸ் 38 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்களை குவித்து தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீரராக மாறியிருந்தார்.

உலகக்கிண்ண குழாத்திலிருந்து வெளியேற்றப்படும் நுவான் பிரதீப்

மறுமுனையில் இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் சாமிக்க கருணாரட்ன மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க அணித்தலைவர் தசுன் ஷானக்க, பினுர பெர்னாண்டோ மற்றும் மகீஷ் தீக்ஷன ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 160 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 17.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களுடன் அடைந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் இலங்கை அணியின் ஆறாவது விக்கெட்டுக்காக சாமிக்க கருணாரட்ன – பானுக்க ராஜபக்ஷ ஜோடி 74 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன், அதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பானுக்க ராஜபக்ஷ 21 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 35 ஓட்டங்கள் பெற, சாமிக்க கருணாரட்னவும் 26 பந்துகளில் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 35 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு அவிஷ்க பெர்னாண்டோ 18 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உடன் 33 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஓமான் அணியின் பந்துவீச்சு சார்பில் மொஹமட் நதீம் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி போராட்டம் காண்பித்த போதும் அவரது பந்துவீச்சு வீணானது.

போட்டியின் சுருக்கம்


Result


Sri Lanka
163/5 (17.3)

Oman
159/8 (20)

Batsmen R B 4s 6s SR
Jatinder Singh b Binura Fernando 5 12 1 0 41.67
Kashyap Prajapati c & b Chamika Karunaratne 22 19 1 2 115.79
Aqib Ilyas c Dasun Shanaka b Chamika Karunaratne 59 38 3 4 155.26
Zeeshan Maqsood c Binura Fernando b Maheesh Theekshana 16 8 0 2 200.00
Ayaan Khan b Lahiru Kumara 20 26 0 0 76.92
Naseem Khushi b Lahiru Kumara 6 2 0 1 300.00
Sandeep Goud c Avishka Fernando b Dasun Shanaka 12 8 2 0 150.00
Mohammad Nadeem run out () 0 1 0 0 0.00
Fayyaz Butt not out 3 5 0 0 60.00
Kaleemullah not out 1 1 0 0 100.00


Extras 15 (b 5 , lb 5 , nb 0, w 5, pen 0)
Total 159/8 (20 Overs, RR: 7.95)
Fall of Wickets 1-15 (2.6) Jatinder Singh, 2-36 (5.2) Kashyap Prajapati, 3-75 (9.1) Zeeshan Maqsood, 4-134 (16.5) Aqib Ilyas, 5-141 (17.2) Naseem Khushi, 6-142 (17.4) Ayaan Khan, 7-142 (17.5) Mohammad Nadeem, 8-157 (19.4) Sandeep Goud,

Bowling O M R W Econ
Binura Fernando 2 0 9 1 4.50
Lahiru Kumara 4 1 20 2 5.00
Maheesh Theekshana 4 0 24 1 6.00
Chamika Karunaratne 4 0 39 2 9.75
Akila Dananjaya 3 0 33 0 11.00
Dasun Shanaka 3 0 24 1 8.00


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka lbw b Kaleemullah 26 29 3 0 89.66
Dinesh Chandimal c Ayaan Khan b Fayyaz Butt 18 8 1 2 225.00
Charith Asalanka c Fayyaz Butt b Zeeshan Maqsood 5 4 4 0 125.00
Avishka Fernando lbw b Mohammad Nadeem 33 18 0 2 183.33
Bhanuka Rajapaksa not out 35 31 0 2 112.90
Dasun Shanaka c Naseem Khushi b Mohammad Nadeem 0 2 0 0 0.00
Chamika Karunaratne not out 35 26 0 3 134.62


Extras 11 (b 1 , lb 3 , nb 3, w 4, pen 0)
Total 163/5 (17.3 Overs, RR: 9.31)
Fall of Wickets 1-25 (2.4) Dinesh Chandimal, 2-40 (4.2) Charith Asalanka, 3-87 (9.2) Pathum Nissanka, 4-89 (10.1) Avishka Fernando, 5-89 (10.3) Dasun Shanaka,

Bowling O M R W Econ
Kaleemullah 3.3 0 31 1 9.39
Bilal Khan 3 0 25 0 8.33
Fayyaz Butt 3 0 30 1 10.00
Zeeshan Maqsood 4 0 38 1 9.50
Ayaan Khan 1 0 13 0 13.00
Mohammad Nadeem 3 1 22 2 7.33



முடிவு – இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…