சுற்றுலா பாகிஸ்தான் A அணிக்கு எதிராக நடைபெறவுள்ள உத்தியோகபூர்வமற்ற 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை குழாத்தில், வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் சிராஸ் இணைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 28ம் திகதி இரண்டு அணிகளுக்கும் இடையிலான தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், அணியின் தலைவராக விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர், சதீர சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.
செம் கரனுக்கு மாற்று வீரரை அறிவித்தது சென்னை
சதீர சமரவிக்ரம இலங்கை அணிக்காக அனைத்துவகை போட்டிகளிலும் விளையாடியுள்ளதுடன், இவருடன் விஷ்வ பெர்னாண்டோ, ஓசத பெர்னாண்டோ, லசித் எம்புல்தெனிய மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோரும் இந்த குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.
அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு பல இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் இலங்கை U19 அணியின் முன்னாள் தலைவர் நிபுன் தனன்ஜய, விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் கமில் மிஷார, மத்தியவரிசை வீரர் நுவனிந்து பெர்னாண்டோ, வேகப்பந்துவீச்சாளர் ஹிமேஷ் ராமநாயக்க மற்றும் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் கலன பெரேரா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், 2019ம் ஆண்டு இலங்கை அணியின், தென்னாபிரிக்க சுற்றுத்தொடரின் போது, அணியில் இணைக்கப்பட்டிருந்த மொஹமட் சிராஸ் A குழாத்தில் இடம்பிடித்துள்ளார். எனினும், மொஹமட் சிராஸ் மற்றும் தனன்ஜய லக்ஷான் ஆகியோரின் உடற்தகுதி தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை A அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம் (விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதிக்காக அனுப்பட்டுள்ளது)
சதீர சமரவிக்ரம (தலைவர்), லஹிரு உதார, நிஷான் மதுஷ்க, கமில் மிஷார, ஓசத பெர்னாண்டோ, லசித் குரூஸ்புள்ளே, நுவனிந்து பெர்னாண்டோ, நிபுன் தனன்ஜய, செஹான் ஆராச்சிகே, சம்மு அஷான், லசித் அபேரத்ன, தனன்ஜய லக்ஷான், மொஹமட் சிராஸ், கலன பெரேரா, ஷிரான் பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ, ஹிமேஷ் ராமநாயக்க, விஷ்வ பெர்னாண்டோ, லசித் எம்புல்தெனிய, சுமிந்த லக்ஷான், அஷைன் டேனியல், துவிந்து திலகரட்ன
போட்டி அட்டவணை
- முதல் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி – ஒக்டோபர் 28 – 31
- 2வது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி – நவம்பர் 04 – 07
- முதல் உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டி – நவம்பர் 10
- 2வது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டி – நவம்பர் 12
- 3வது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டி – நவம்பர் 15
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…