T20 உலகக் கிண்ணத்திற்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்

305
Getty Images

இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை நேற்று (03) முதல் ஆரம்பமாகியிருப்பதாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) குறிப்பிட்டிருக்கின்றது.

மாயஜாலம் செய்து இலங்கையின் உலகக் கிண்ண கனவினை நனவாக்கிய ஹேரத்

16 நாடுகளின் கிரிக்கெட் அணிகள் பங்குபெறுகின்ற 07ஆவது ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரின் போட்டிகள் இம்மாதம் 17ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 14ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் நடைபெறுகின்றன.

அதன்படி இந்த T20 உலகக் கிண்ணத் தொடரில் மொத்தமாக 45 போட்டிகள் நடைபெறவுள்ளதோடு ஒவ்வொரு போட்டிக்குமான டிக்கெட்டுக்களையும் ICC இன் உத்தியோகபூர்வ இணையதளங்களில் ஒன்றான https://www.t20worldcup.com/tickets இல் கொள்வனவு செய்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

டிக்கெட் விற்பனை ஒரு பக்கமிருக்க கொவிட்-19 வைரஸ் நிலைமைகள் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில், இந்த T20 உலகக் கிண்ணத் தொடருக்காக நடைபெறவுள்ள போட்டிகள் அனைத்தினையும் பார்வையிட 70% பார்வையாளர்களுக்கு (அபுதாபி மைதானத்தின் சிறப்பு பார்வையாளர் வசதி – Socially Distanced ‘Pods’ உள்ளடங்கலாக) வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க, ஓமானில் T20 உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறும் போது அதனை 3000 பார்வையாளர்கள் பார்வையிட முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

சங்கக்காரவினால் MCC யின் வரலாற்றில் முதல் பெண் தலைவர்

அதேநேரம், T20 உலகக் கிண்ணத் தொடருக்கான டிக்கெட்டுக்களின் விலைகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் 30 திர்ஹம்களில் (இலங்கை நாணயப்படி சுமார் 1,600 ரூபா) இருந்தும், ஓமானில் 10 ரியால்களில் (இலங்கை நாணயப்படி சுமா் 5,100 ரூபா) இருந்தும் ஆரம்பிக்கின்றன.

இந்த T20 உலகக் கிண்ணத் தொடரின் போட்டிகள் நடைபெறும் போது T20 உலகக் கிண்ணத்தினை பார்வையிட வரும் பார்வையாளர்கள் இடையே கொவிட்-19 வைரஸ் தடுப்பு விதிமுறைகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<