இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக 1000 ஓட்டங்கள் எடுத்த முதல் வீரராக ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.
IPL கிரிக்கெட்டில் அபுதாபியில் நேற்று (23) நடைபெற்ற 34ஆவது லீக் போட்டியில் நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது.
IPL வீரருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களை எடுத்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடியு கொல்கத்தா அணி, 15.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 30 பந்துகளில் 33 ஒட்டங்களை எடுத்து சுனில் நரேனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும் ரோஹித் சர்மா தனது 18ஆவது ஓட்டத்தை கடந்த போது கொல்கத்தா அணிக்கு எதிராக 1000 ஓட்டங்களை எட்டினார்.
இதன்மூலம் IPL அரங்கில் ஒரு அணிக்கு (கொல்கத்தா அணி) எதிராக 1000 ஓட்டங்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் டேவிட் வோர்னர், பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 943 ஓட்டங்களும், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக 915 ஓட்டங்களும் எடுத்து பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சம்சனுக்கு அபராதம்
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விராட் கோஹ்லி டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு எதிராக 909 ஓட்டங்கள் எடுத்து நான்காவது இடத்தில் உள்ளார்.
இதேவேளை, இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடர்ந்து 2 வெற்றிகளுடன் IPL புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தொடர்ந்து 2 தோல்விகளை சந்தித்துள்ள மும்பை அணி 6ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…