இந்தியா செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி

2448

அடுத்த ஆண்டின் (2022) பெப்ரவரி மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அங்கே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் என்பவற்றில் ஆடவிருக்கின்றது.

பாகிஸ்தான் வந்து விளையாடுமாறு இலங்கைக்கு அழைப்பு

இலங்கையின் இந்திய சுற்றுப்பயணத்தில் வரும் டெஸ்ட் தொடர், ஐ.சி.சி. இன் இரண்டாவது பருவகாலத்திற்கான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்குள் அடங்குவதோடு, குறித்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 2022ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி பெங்களூரு நகரில் நடைபெறுகின்றது. இதன் பின்னர் மொஹாலிக்கு பயணமாகும் இரண்டு அணிகளும் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் மார்ச் மாதம் 05ஆம் திகதி விளையாடவிருக்கின்றன.

டெஸ்ட் தொடரினை அடுத்து இரு அணிகளும் 2022ஆம் ஆண்டின் மார்ச் 13ஆம் திகதி மொஹாலியில் நடைபெறும் T20 தொடரின் முதல் போட்டியில் பங்கெடுக்கவிருக்கின்றன. தொடர்ந்து மார்ச் மாதம் 15ஆம், 18ஆம் திகதிகளில் T20 தொடரின் அடுத்த இரண்டு போட்டிகளும் முறையே தரம்சாலா மற்றும் லக்னோவ் ஆகிய நகரங்களில் இடம்பெறவிருக்கின்றன.

இந்திய அணியுடனான கிரிக்கெட் தொடரிற்கு முன்னர் அவுஸ்திரேலியாவிற்கு பயணம் செய்யும் இலங்கை கிரிக்கெட் அணி, அங்கே 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவரானார் ரமீஸ் ராஜா

இலங்கை அணியின் இந்திய சுற்றுப்பயணம்

டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட் – பெப்ரவரி 25-மார்ச் 1, 2022 – பெங்களூரு

இரண்டாவது டெஸ்ட் – மார்ச் 5- மார்ச்9, 2022 – மொஹாலி

T20 தொடர்

முதல் T20 போட்டி – மார்ச் 13, 2022 – மொஹாலி

இரண்டாவது T20 போட்டி – மார்ச் 15, 2022 – தரம்சாலா

மூன்றாவது T20 போட்டி – மார்ச் 18, 2022 – லக்னோவ்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…