எவரெஸ்ட் பிரீமியர் லீக்கில் ஏழு இலங்கை வீரர்கள்

Everest Premier League - 2021

619

நேபாளத்தில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள எவரெஸ்ட் பிரீமியர் லீக் T20 தொடரில் இலங்கையிலிருந்து ஏழு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

நேபாள கிரிக்கெட் சபையினால் நான்காவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான எவரெஸ்ட் பிரீமியர் லீக் T20 தொடர் இம்மாதம் 25ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இம்முறை போட்டித்தொடரில் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் உட்பட ஏழு பேர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெற்றுள்ள இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்க மற்றும் வேகப்பந்துவீச்சாளரான தம்மிக்க பிரசாத் ஆகிய இருவரும் இம்முறை போட்டித்தொடரில் விளையாடவுள்ளனர்.

எவரஸ்ட் பிரீமியர் லீக் தொடரில் களமிறங்கும் சீக்குகே பிரசன்ன

அதேபோல, இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர்களான சீக்குகே பிரசன்ன, அசேல குணரட்ன மற்றும் ஓசத பெர்ணான்டோ, சந்துன் வீரக்கொடி, சஹான் ஆராச்சிகே உள்ளிட்ட இளம் வீரர்களும் இம்முறை எவரெஸ்ட் பிரீமியர் லீக் தொடரருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் சீக்குகே பிரசன்ன, அசேல குணரட்ன மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகிய மூன்று வீரர்களும் அண்மையில் நிறைவுக்குவந்த SLC அழைப்பு T20 தொடரில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை அணியின் அனுபவ விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான தினேஷ் சந்திமாலை எவரெஸ்ட் பிரீமியர் லீக்கில் பைரகவா கிளேடியேட்டர்ஸ் அணி ஒப்பந்தம் செய்திருந்தது.

Video – T20i World Cup க்கு இளம் அணியை அறிவித்த இலங்கை..! | T20 World Cup Sri Lanka Squad

எனினும், அவர் T20 உலகக் கிண்ணத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இலங்கைக் குழாத்தில் இடம்பிடித்த காரணத்தால் குறித்த தொடரிலிருந்து விலகிக்கொண்டார்.

இதேவேளை, எவரெஸ்ட் பிரீமியர் லீக் T20 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள் இம்மாதம் 21ஆம் திகதி நேபாளம் புறப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<