இலங்கை பாரா வெற்றியாளர்களுக்கு பரிசாக மோட்டார் கார்

2020 Tokyo Paralympics

362
SLAAJ has presented car

டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தினேஷ் பிரியன்த மற்றும் சமித்த துலான் ஆகியோருக்கு இலங்கை மோட்டார் வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினால் இரண்டு அதி நவீன மோட்டார் கார்கள் பரிசாக வழங்கிவைக்கப்பட்டது.

டோக்கியோ பாராலிம்பிக்கில் பங்குகொண்ட இலங்கை அணி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று மாலை நாட்டை வந்தடையவுள்ளனர்.

இதனிடையே, பாராலிம்பிக் பதக்கம் வென்ற இலங்கை வீரர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து செங்கம்பள வரவேற்பளிக்க விளையாட்டுத்துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

>> பாராலிம்பிக்கில் உலக சாதனையுடன் தங்கம் வென்றார் தினேஷ்

இதுஇவ்வாறிருக்க, நாடு திரும்புகின்ற இலங்கை வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்கும், அவர்களை வழியனுப்பவும் ஜப்பானுக்கான இலங்கை தூதர் சஞ்சீவ் குணசேகர மற்றும் ஜப்பானில் வசிக்கும் பல இலங்கையர்கள் இன்று காலை ஜப்பானின் நரிட்டா விமான நிலையத்திற்கு வருகை தந்தனர்

இதன்போது, தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியன்த மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற சமித்த துலான் ஆகிய இருவருக்கும் ஜப்பானுக்கான இலங்கை தூதரினால் இரண்டு அதிநவீன மோட்டார் கார்கள் பரிசாக வழங்கிவைக்கப்பட்டது

இதன்போது கருத்து வெளியிட்ட ஜப்பானுக்கான இலங்கை தூதர் சஞ்சீவ் குணசேகர, தினேஷ்மற்றும் சமித்த ஆகிய இருவரும் எமது நாட்டிற்கு பெரும் புகழைத் தேடித் தந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இன்னும் பல விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காகவும், இந்த இரண்டு விளையாட்டு வீரர்களின் திறமைகளை அங்கீகரிப்பதற்காகவும் இரண்டு நவீன மோட்டார் கார்களை வழங்குவதாக கூறினார்.

>> பாராலிம்பிக்கில் இலங்கை வீரர்கள் பதக்க வேட்டை

இதேவேளை, பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியன்த ஹேரத்துக்கு 5 கோடி ரூபா பணப்பரிசும் வெண்கலப் பதக்கம் வென்ற சமித்த துலான் கொடித்துவக்குவுக்கு 2 கோடி ரூபாவும் பணப்பரிசாக வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது

அத்துடன் இவர்கள் இருவருக்கும் வழங்கப்படவுள்ள மொத்த பணப்பரிசுத் தொகையில் 20 சவீதமான ஒரு கோடியே 40 இலட்சம் ரூபா பணப்பரிசு இருவரினதும் பயிற்றுநரான பிரதீப் நிஷான்தவுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

>> மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க <<