இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இன்று (12) ஆரம்பமாகவிருந்த டயலொக் SLC அழைப்பு T20 தொடர், சீரற்ற காலநிலை காரணமாக, நாளைய தினத்துக்கு (13) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பிற்பகல் தசுன் ஷானக தலைமையிலான SLC கிரேய்ஸ் மற்றும் அஷான் பிரியன்ஜன் தலைமையிலான SLC கிரீன் அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருந்தன.
இலங்கை தொடருக்கான தென்னாபிரிக்க குழாம் அறிவிப்பு
எனினும், சீரற்ற காலநிலை இன்றைய நாள் முழுவதும் நீடித்துவருவதால், போட்டியை நாளைய தினத்துக்கு ஒத்திவைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்று இரவு நடைபெறவிருந்த தினேஷ் சந்திமால் தலைமயிலான SLC ரெட்ஸ் மற்றும் அஞ்செலோ பெரேரா தலைமையிலான SLC ப்ளூஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த இரண்டு போட்டிகளும் நாளை (13) நடைபெறவுள்ளன. அதேநேரம், டயலொக் SLC அழைப்பு T20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் சிலருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, SLC ப்ளூஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த தனன்ஜய டி சில்வா, முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த அணியின் தலைவராக அஞ்செலோ பெரேரா செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமாத்திரமின்றி சரித் அசலங்க மற்றும் சாமிக்க கருணாரத்ன அகியோரும் தங்களுடைய அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாளைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட முதல் நாள் போட்டிகள் இரண்டும், இன்றைய தினத்துக்கான நேர அட்டவணையின்படி, நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…