டோக்கியோ ஒலிம்பிக்கில் மேலும் 12 பேருக்கு கொவிட்-19 தொற்று

Tokyo Olympic - 2020

217
Reuters

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியுள்ள 2 வீரர்கள் உள்ளிட்ட மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஒலிம்பிக் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை மிகவும் எளிமையாக ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், டோக்கியோவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அங்கு அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று

ஒலிம்பிக் கிராமத்தில் முதன் முதலாக தென்னாபிரிக்கா கால்பந்து அணியின் 2 வீரர்கள் உட்பட 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், செக் குடியரசு நாட்டை சேர்ந்த கடற்கரை கரப்பந்து வீரர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார். இதனால் அவர் பங்கேற்கும் போட்டியை ஒத்திவைக்கும்படி அந்த நாட்டு அணியின் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இதேபோல் அங்குள்ள நாரிடா பகுதியில் தங்கி பயிற்சியில் ஈடுபட்ட அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் வீராங்கனை ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இதேநேரம், 2 தடகள வீரர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவினர் கூறியுள்ளனர். 

இதனால் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது. 

ஒலிம்பிக் போட்டிக்குச் சென்ற உகண்டா நாட்டு வீரர் மாயம்

அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

செக் குடியரசின் மேசைப்பந்து வீரர் பாவெல் சிரூசெக் மற்றும் நெதர்லாந்தின் ஸ்கேட்போர்டர் வீராங்கனை கேண்டி ஜேக்கொப்ஸ் ஆகியோருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு போட்டியாளர்களுக்கும் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் எடுக்கப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஒலிம்பிக் கிராமத்தில் நாளுக்கு நாள் தொற்று அதிகரிக்கும் நிலையில், தடுப்புப் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.   

ஒலிம்பிக் கிராமத்தில் 2 கால்பந்து வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று

ஒலிம்பிக் விளையாட்டு விழா நடைபெறவுள்ள டோக்கியோவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அங்கு அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

எதுஎவ்வாறாயினும், கொரோனா அதிகரித்தாலும் கடைசி நேரத்தில் ஒலிம்பிக் விளையாட்டு விழா இரத்து செய்யப்பட மாட்டாது என சர்வதேச ஒலிம்பிக் சங்கம் கூறியுள்ளது.

>>மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க<<