உலகின் மிகப்பெரும் விளையாட்டு கொண்டாட்டமான ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 2032ம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கின் போது, ஒலிம்பிக் குழு உறுப்பினர்களிடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பின்படி, பிரிஸ்பேனில் 2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஒலிம்பிக் கிராமத்தில் 2 கால்பந்து வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று
அதன்படி, அவுஸ்திரேலியாவில் மூன்றாவது தடவையாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த அறிவிப்பு வெளியாகிய போது, பிரிஸ்பேன் நகர வானில் பட்டாசுகளால் எரியூட்டப்பட்டன. அதேநேரம், டோக்கியோவுக்கு அவுஸ்திரேலிய தூதராக சென்ற குயின்ஸ்லாந்து மாநில அரசின் தலைவர் அன்னஸ்டாசியா பாலாஸ்குக், இதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்
இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவுஸ்திரேலிய ஒலிம்பிக் குழுவின் தலைவரும், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் துணைத் தலைவருமான ஜோன் கோட்ஸ் “இது ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் பெருமை சேர்க்கக்கூடிய நாள்.
“சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. பிரிஸ்பேன் 2032 ஒலிம்பிக் போட்டிகளின் கொள்கைகளைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடனும், தயாராகவும் உள்ளது. பிரிஸ்பேன் ஒலிம்பிக் இப்போது முழு உற்சாகத்துடன் உள்ளது. உலகெங்கிலும் உள்ள வீரர்களுக்கு நாங்கள் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தருவோம் என்று உறுதியளிக்கிறேன்” என்றார்.
அவுஸ்திரேலியா இதற்கு முன்னர் இரண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியுள்ளது. 1956இல் மெல்போர்னிலும், 2000ம் ஆண்டில் சிட்னியிலும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன. 2032 ஒலிம்பிக்கிற்கு 5 பில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளமை.
>> மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க <<