மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து குழாத்தில் டொம் பெண்டன்

Sri Lanka tour of England 2021

230
GettyImages

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டிக்கான, இங்கிலாந்து குழாத்தில் முதல் இலக்க துடுப்பாட்ட வீரர் டொம் பெண்டன் இணைக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 4ம் திகதி பிரிஸ்டோலில் நடைபெறவுள்ளது.

கொழும்பு, தம்புள்ளையில் பயிற்சிபெறவுள்ள 39 இலங்கை வீரர்கள்

இந்தநிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக அணியிலிருந்து வெளியேறியிருந்த இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் டேவிட் மலானுக்கு பதிலாக, டொம் பெண்டன் இணைக்கப்பட்டுள்ளார் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டொம் பெண்டன், இதுவரையில் இங்கிலாந்து அணிக்காக ஆறு ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 T20I போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேநேரம், இந்த வாரம் நடைபெற்ற T20 பிளாஸ்ட் தொடரில் சமரெஸ்ட் அணிக்காக 47 பந்துகளில் சதம் கடந்து அசத்தியிருந்தார். இந்த நிலையில், இவருக்கு மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொம் பெண்டன் இறுதியாக இங்கிலாந்து அணிக்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சௌதெம்டனில் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார். அதனைத்தொடர்ந்து, தற்போது மீண்டும் தேசிய அணிக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியிலிருந்து டேவிட் மலான் விலகியுள்ள அதேநேரம், விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ஜோஸ் பட்லர் உபாதை காரணமாக ஏற்கனவே வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…