கொழும்பு, தம்புள்ளையில் பயிற்சிபெறவுள்ள 39 இலங்கை வீரர்கள்

Sri Lanka Cricket – Annual Contracts & Training

2147

இலங்கை கிரிக்கெட் சபையானது, கொழும்பு மற்றும் தம்புள்ள ஆகிய மைதானங்களில், 39 வீரர்களை உள்ளடக்கிய குடியிருப்பு பயிற்சி முகாம் ஒன்றினை நடத்துவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

குறித்த இந்த வீரர்கள் கொண்ட குழாமானது, இந்திய அணிக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர் மற்றும் லங்கா பிரீமியர் லீக் தொடர்களை முன்னிட்டு பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளது.

இந்திய தொடருக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள 10 வீரர்கள்

இதில், இலங்கை ஏ அணி மற்றும் வளர்ந்துவரும் வீரர்கள் என்ற அடிப்படையில் 26 வீரர்களும், தேசிய அணி வீரர்கள் என்ற ரீதியில் 13 வீரர்களும் தங்களுடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, 26 வீரர்களும் தம்புள்ளையில் கடந்த 25ம் திகதி முதல் நடைபெற்று வரும் பயிற்சி முகாமிலும், தேசிய அணி ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்ட 13 வீரர்கள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.

இதில், இலங்கை ஏ மற்றும் வளர்ந்துவரும் வீரர்களுக்கான பயிற்சி முகாம் எதிர்வரும் 22ம் திகதி நிறைவுக்கு வரும் என்பதுடன், கொழும்பில் நடைபெறும் பயிற்சி முகாம் எதிர்வரும் 10ம் திகதியுடன் நிறைவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை வளர்ந்துவரும் மற்றும் ஏ பயிற்சி குழாம்

துடுப்பாட்ட வீரர்கள் – சதீர சமரவிக்ரம, நிபுன் தனன்ஜய, கமில் மிஸார, ஷமிந்த பெர்னாண்டோ, நிஷான் மதுஸ்க, லசித் அபேரத்ன, சம்மு அஸான், மினோத் பானுக, லஹிரு உதார, நவனிந்து பெர்னாண்டோ, சங்கீத் குரே

சகலதுறை வீரர்கள் – கமிந்து மெண்டிஸ், செஹான் ஆராச்சிகே, லஹிரு சமரகோன், புலின தரங்க

சுழல் பந்துவீச்சாளர்கள் – மஹீஸ் தீக்ஷன, அஷைன் டேனியல், நிமேஷ் விமுக்தி, சுமிந்த லக்ஷான்

வேகப்பந்துவீச்சாளர்கள் – டில்ஷான் மதுசங்க, ஹிமேஷ் ராமநாயக்க, மொஹமட் சிராஸ், உதித் மதுசான், நுவான் துஸார, சாமிக குணசேகர, கலன பெரேரா

இலங்கை சிரேஷ்ட பயிற்சி குழாம்

துடுப்பாட்ட வீரர்கள் – டில்ஷான் முனவீர, சந்துன் வீரகொடி, அஞ்செலோ பெரேரா, அஷான் பிரியன்ஜன், ரொஷேன் சில்வா

சகலதுறை வீரர்கள் – லஹிரு மதுசங்க, அசேல குணரத்ன, சதுரங்க டி சில்வா, மிலிந்த சிறிவர்தன

சுழல் பந்துவீச்சாளர்கள் – ஜெப்ரி வெண்டர்சே, பிரபாத் ஜயசூரிய, மலிந்த புஷ்பகுமார

வேகப்பந்துவீச்சாளர் – லஹிரு கமகே

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…