மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இணையும் அன்ரே ரசல்

South Africa tour of West Indies 2021

178

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் இரண்டு T20I போட்டிகளுக்கான மேற்கிந்திய தீவுகளின் 13 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில், மேற்கிந்திய தீவுகளின் முன்னணி சகலதுறை வீரர்களில் ஒருவரான அன்ரே ரசல் இணைக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணி 2012 மற்றும் 2016ம் ஆண்டுகளில் T20I உலகக் கிண்ணத்தை வெற்றிக்கொண்ட குழாத்தில் விளையாடியிருந்தார். 

T20‌ ‌உலகக்‌ ‌கிண்ணம்‌ ‌ஐக்கிய‌ ‌அரபு‌ ‌இராச்சியத்தில்‌ ‌

இந்தநிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு பின்னர் அன்ரே ரசல் மீண்டும், மேற்கிந்திய தீவுகள் குழாத்துக்குள், இணைக்கப்பட்டுள்ளார்.  அத்துடன், கொவிட்-19 தொற்றுக்கு பின்னர் முதன்முறையாக மைதானத்துக்கு ரசிகர்களை அழைப்பதற்கான நடவடிக்கையையும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை மேற்கொண்டுள்ளது.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T20I குழாத்துக்கு அன்ரே ரசல் இணைக்கப்பட்டமை தொடர்பில், கருத்து வெளியிட்ட மேற்கிந்திய தீவுகளின் தேர்வுக்குழு தலைவர் ரொஜர் ஆர்பர் கருத்து வெளியிடுகையில்,

“அன்ரே ரசல் அணிக்கு மிக முக்கிய வீரர். துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என அணிக்கு தேவையான வீரர். எனவே, இரண்டு துறைகளுக்கும் பலமான விடயம். இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிராக வெளிப்படுத்திய திறமையை வெளிப்படுத்த எதிர்பார்க்கிறோம். அத்துடன், இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20I உலகக் கிண்ணத்துக்கு பலமான குழாமாக களமிறங்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கம்” என்றார்.

அன்ரே ரசல், பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் இந்த ஆண்டு அறிமகமாகியிருந்தாலும், தன்னுடைய முதல் போட்டியில் பந்து தலையில் தாக்கியதால், சிகிச்சைகளுக்கு முகங்கொடுத்தார். இதனைத்தொடர்ந்து அவர் தொடரிலிருந்து விலகியிருந்தார்.

தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு T20I போட்டிகள், இன்று மற்றும் நாளை (27) திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குழாம்

கீரன் பொல்லாரட் (தலைவர்), நிக்கோலஸ் பூரன், பெபியன் எலன், டுவைன் பிராவோ, பீடல் எட்வர்ட்ஸ், என்ரே பிளட்சர், கிரிஸ் கெயில், ஜேசன் ஹோல்டர், எவின் லிவிஸ், ஒபட் மெகோய், அன்ரே ரசல், லிண்ட்ல் சிம்மன்ஸ், கெவின் சின்கிளையர்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<