இந்த ஆண்டுக்கான (2021) லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடர், கடந்த ஆண்டு போன்று ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாவது பருவகாலத்திற்கான LPL தொடர், இந்த ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரையில் நடைபெறும் என்பது உறுதிப்படுத்தப்படும் அது எங்கே நடைபெறும் என்பது தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
துடுப்பாட்ட வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தும் மிக்கி ஆர்தர்!
எனினும், LPL தொடரின் நிர்வாக இயக்குனரான ரவீன் விக்ரமரட்ன ஹரி தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் கொவிட்-19 வைரஸ் அச்சத்தினால் உயிரியல் பாதுகாப்பு வலயம் ஒன்றினை பேண வேண்டிய தேவை ஒன்று இருப்பதன் காரணமாக LPL தொடர் கடந்த ஆண்டு போன்று ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்திலேயே நடைபெறும் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
”தொடரினை நடாத்தும் இடங்கள் பற்றிக் குறிப்பிடும் போது, நாங்கள் முன்னர் இந்த தொடரினை மூன்று இடங்களில் நடாத்துவதற்கு தீர்மானித்திருந்தோம். எனினும், நாம் இந்த நிலைப்பாட்டினை தற்போது மாற்றியிருப்பதோடு ஹம்பாந்தோட்டையிலேயே (LPL) தொடரினை நடாத்த முடிவெடுத்திருக்கின்றோம். (அங்கே) எங்களுக்கு திட்டமான உயிரியல் பாதுகாப்பு வலயம் ஒன்றினை பேணிக்கொள்ள முடியும்.”
LPL தொடரில் இந்த ஆண்டு பங்கெடுக்கும் வெளிநாட்டு வீரர்கள் அவர்களை பதிவு செய்து கொள்வதற்கான சந்தர்ப்பம் இணையம் வாயிலாக உருவாக்கிக் கொடுக்கப்படும் எனவும் ரவீன் விக்ரமரட்ன குறிப்பிட்டிருக்கின்றார்.
அதன்படி, Sunday Times பத்திரிகைக்கு செவ்வி ஒன்றினை வழங்கிய ரவீன் விக்ரமரட்ன இணையவழி வாயிலான வீரர்கள் பதிவு இம்மாதம் 21ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையில் இடம்பெறும் எனக் கூறியிருக்கின்றார். இதேநேரம், LPL தொடரின் வீரர்கள் ஏலம் ஜூலை மாத ஆரம்பத்தில் நடைபெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
டோனி, சுனில் கவாஸ்கரின் சாதனைகளை முறியடித்தார் கோஹ்லி
கடந்த ஆண்டு முதல் முறையாக நடைபெற்றிருந்த LPL தொடரில் இலங்கையின் மாகாணங்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஐந்து அணிகள் பங்குபற்றியிருந்ததோடு, தொடரின் வெற்றியாளராக ஜப்னா ஸ்டாலியன்ஸ் மகுடம் சூடியிருந்தது.
இதோடு, கடந்த ஆண்டுக்கான LPL தொடரினை உலகில் முழுவதிலும் இருக்கும் கிரிக்கெட் இரசிகர்கள் 135 மில்லியன் பேர் வரையில் கண்டுகளித்திருந்தமையும் குறிப்பிடதக்க விடயமாகும்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<